அதிரடி ஏஜென்ட்டாக மாறிய ஷாம்.. தெலுங்கில் புது அதிரடி!

Oct 25, 2023,04:53 PM IST
சென்னை:  அதிரடியான ரா ஏஜென்ட்டாக புதிய தெலுங்குப் படத்தில் கலக்கலான வேடத்தில் நடிக்கிறார் ஷாம்.

தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த தூக்குடு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி இயக்குனர் சீனு வைட்லா. சீனு வைட்லா இயக்கத்தில் ஷாம் புதிய படத்தில் அதிரடியான கேரக்டரில் வருகிறார். 

இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இத்தாலியில் நடந்து வருகிறது. இப்படத்தின் சண்டை காட்சிகள் அனைத்தும் இத்தலியில் அதிரடியாக படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இப்படத்தில் இதுவரை தான் ஏற்று நடித்திராத ரா ஏஜென்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஷாம். 



கோபிசந்த், காவியா தாப்பர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்தாலி நாட்டில் உள்ள மிலன், மடேரா மற்றும் ரோம் உள்ளிட்ட நகரங்களில் இதன் படப்பிடிப்பு கடந்த 20 நாட்களாக நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பில் ஷாம் நடித்த விறுவிறுப்பான ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் தற்போது இந்தியா திரும்பியுள்ளனர்.

தமிழ் சினிமாவில்  கடந்த 20 வருடங்களாக திரையுலக பயணத்தில் எந்த தொய்வும் இல்லாமல் சீராக பயணித்து வருபவர் நடிகர் ஷாம். இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் காதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம்  உள்ளவைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். இதனால் தமிழ் மட்டும் மின்றி தெலுங்கு படங்களிலும் பிஸியான நடிகராகவே வலம் வருகிறார். 



இந்த வருட துவக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான  திரைப்படம் வாரிசு. இதில், விஜய்யின் அண்ணனாக சற்று வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார் ஷாம். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் பிரபல இயக்குநர் சீனு வைட்லா இயக்கி வரும் புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார் ஷாம். இந்தப் படமும் ஷாமுக்கு பெரும் வெற்றியைத் தேடித் தரும் என்று நம்பலாம்.

சமீபத்திய செய்திகள்

news

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

news

அட்சய திருதியை முன்னிட்டு.. தங்கத்தின் விலை தொடர் சரிவு.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி..!

news

Swearing in: அமைச்சராக இன்று மாலை பதவி ஏற்கிறார்.. மனோ தங்கராஜ்

news

ஜனாதிபதி கையால் பத்மபூஷன் விருதை பெற.. குடும்பத்துடன் டெல்லிக்கு கிளம்பினார்.. நடிகர் அஜித்!

news

Cabinet Reshuffle: பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்.. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்!

news

அமைச்சர்கள் நீக்கம்.. தானாக எடுத்தது அல்ல.. தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்டது.. டாக்டர் தமிழிசை

news

IPl 2025.. எல்லை தாண்டி எகிறி அடிக்கும் வீரர்கள்.. ஐபிஎல்லில் இதுவரை குவிக்கப்பட்ட Super சிக்சர்கள்!

news

துபாய், சிங்கப்பூர், கொழும்பு வழியாக.. பாகிஸ்தானுக்கு தங்கு தடையின்றி செல்லும்.. இந்தியப் பொருட்கள்!

news

பஹல்காம் தாக்குதல் .. மத்திய அரசு, ராணுவம் குறித்து விமர்சனம்.. நாடு முழுவதும் 19 பேர் கைது

அதிகம் பார்க்கும் செய்திகள்