71வது தேசிய திரைப்பட விருதுகள்.. ஷாருக் கான் சிறந்த நடிகர்.. எம்.எஸ். பாஸ்கர் சிறந்த துணை நடிகர்!

Aug 01, 2025,07:31 PM IST

டெல்லி: 71வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ஜவான் படத்தில் நடித்த ஷாருக் கான் மற்றும் டுவெல்த் பெயில் படத்தில் நடித்த விக்ராந்த் மாசி ஆகியோர் சிறந்த நடிகருக்கான விருதைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.


சிறந்த துணை நடிகராக எம்.எஸ். பாஸ்கர் (பார்க்கிங்), துணை நடிகையாக ஊர்வசி (உள்ளொழுக்கு) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சிறந்த நடிகையாக ராணி முகர்ஜி தேர்வாகியுள்ளார்.




பார்க்கிங் படத்திற்கு மொத்தம் 3 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த தமிழ்ப் படம், சிறந்த துணை நடிகர், சிறந்த திரைக்கதை ஆகிய பிரிவுகளில் இப்படம் விருதுகளைப் பெற்றுள்ளது.


இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், சிறந்த பாடலுக்கான இசையமைப்பாளர் விருதைப் பெறுகிறார். தனுஷ் நடித்த வாத்தி படத்தின் பாடல்களுக்காக அவருக்கு இந்தப் பெருமை கிடைத்துள்ளது.


பெரும் சலசலப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி படத்துக்கு 2 விருதுகளும், அனிமல் படத்திற்கு 2 விருதுகளும் கிடைத்துள்ளன.



பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் நடிக்க வந்து 30 வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால் இப்போதுதான் முதல் முறையாக ஒரு தேசிய விருதைப் பெறுகிறார். அட்லீ இயக்கத்தில் உருவாகியிருந்த ஜவான் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருந்தார் ஷாருக் கான். அப்படம் வசூலிலும் பட்டையைக் கிளப்பியது. ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்து வரலாறு படைத்தது ஜவான். தொய்வடைந்து போயிருந்த இந்தி சினிமாவுக்கு ஜவான் தான் புத்துயிர் ஊட்டியது என்பது நினைவிருக்கலாம்.


இந்த முறை சிறந்த நடிகருக்கான விருதை இரண்டு இந்தி நடிகர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர். அதேபோல சிறந்த நடிகைக்கான விருதும் கூட இந்திக்கே போயுள்ளது குறிப்பிடத்தக்கது. ராணி முகர்ஜி நடித்த மிஸஸ் ராணி முகர்வசி வெர்சஸ் நார்வே படத்துக்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு

news

இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்

news

முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா

news

அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்

news

புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!

news

ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்

news

புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!

news

த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!

news

நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்