வாஷிங்டன்: இசைத்துறையின் உயரிய விருதான கிராமி விருது சங்கர் மகாதேவனின் சக்தி இசைக்குழுவிற்கு கிடைத்துள்ளது.
இசைக்கலைஞர்களுக்கு உயரிய விருதாக கருதப்படுவது கிராமி விருது. இந்த விருது அமெரிக்காவைச் சேர்ந்த தி ரெக்கார்டிங் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இசை கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 1951ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டிற்கான 66வது கிராமி விருது வழங்கும் விழா பிப்ரவரி 4ம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் எஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளும் வழங்கப்பட்டன.

விழாவில் சிறந்த ஆல்பம் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சங்கர் மகாதேவனின் சக்தி இசைக்குழுவிற்கு விருது கிடைத்துள்ளது. பாடகர் சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், உஸ்தாத் ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள இக்குழுவினரின் "திஸ் மொமென்ட்" என்ற ஆல்பத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
கடந்த ஆண்டு இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த ரிக்கி கேஜ், டிவைன் டைட்ஸ் ஆல்பத்துக்காக சிறந்த ஆடியோ ஆல்பத்திற்கு கிடைத்த நிலையில், இந்தாண்டு சக்தி இசைக்குழுவிற்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கும் கிராமி விருது கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் சங்கர் மகாதேவன் பேசுகையில், எனது குழு, கடவுள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இந்தியாவுக்கு நன்றி. இந்தியாவை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
Tatkal ticket Booking: கடைசி நிமிட டிக்கெட்டுக்கு இனி 'ஒற்றை சாவி' - ஓ.டி.பி கட்டாயம்
Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!
பாஜக காலுன்ற முடியாத மாநிலம் தமிழகம்..மத்திய அரசு வஞ்சிக்கிற போக்கை கடைபிடிக்குறது: செல்வப்பெருந்தகை
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
{{comments.comment}}