மும்பை : தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை இயக்கிய படக்குழுவினர் மணிப்பூர் சம்பவத்தையும் மணிப்பூர் ஃபைல்சாக எடுக்கலாம் என மத்திய அரசை நேரடியாக விமர்சித்து சாம்னா பத்திரிக்கையில் கட்டுரை வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டின் துவக்கத்தில் பாலிவுட் டைரக்டர் விக்வேக் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்று படம் ரிலீசானது. இதில் காஷ்மீரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் பற்றி விவரித்திருந்தனர். இந்த படம் தேசிய அளவில் அரசியல் ரீதியாக பெரும் விவாதித்திற்கு உள்ளாக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக நாட்டையே உலுக்கிய மணிப்பூர் பற்றி சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த கட்டுரையில், வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் வன்முறைகளும், அராஜகங்களும் காஷ்மீரையே மிஞ்சி விட்டன. சமீப காலமாக தஷ்கின்ட் ஃபைல்ஸ், தி கேரளா ஸ்டோரி, தி காஷ்மீர் ஃபைல்ஸ் ஆகிய படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது மணிப்பூரில் நடக்கும் வன்முறைகளையும் கொடுமைகளையும் வைத்து மணிப்பூர் ஃபைல்ஸ் படத்தையும் எடுக்கிறார்கள்.
மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்து வரப்பட்ட சம்பவத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிடவில்லை. பிரதமர் மோடியும் அது பற்றி பேசவில்லை. இது 140 கோடி இந்தியர்களுக்கும் அவமானம். இதற்காக சட்டம் கொண்டு வரப்படும் என்கிறார் பிரதமர். அப்படி செய்தவர்களுக்கு தண்டனை ஏதும் கிடையாது.
மணிப்பூர் சம்பவத்திற்கு அந்த மாநிலம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டதே காரணம். மணிப்பூரில் 60,000 துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அப்படியானால் அங்கு நிலைமை பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரின் கையை மீறி போய் விட்டது என்று தான் அர்த்தம் என மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}