ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும்: சிவாஜி மூத்த மகன் ராம்குமார் கோரிக்கை

Mar 05, 2025,03:31 PM IST

சென்னை: ஜப்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வீடு, தனது சகோதரர் பிரபுவுக்கு சொந்தமானது. அந்த வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லாததால் ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.


நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரராக  கொண்டது  ஈஷன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற படம் தயாரிக்கப்பட்டது. இந்த படத்தை தயாரிக்க தனபாக்கியம் என்டர்பிரைஸ் நிறுவனத்திடம் ரூ. 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் பெறப்பட்டிருந்தது.


இந்த கடன் தொகைக்கு 30 சதவீதம் வட்டியுடன் திருப்பி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.  கடன் தொகையை திருப்பி தராததை  முன்னிட்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார். நீதிபதி டி. ரவீந்திரன் கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிக்க, ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் ஒப்படைக்கும் படி கடந்த 2024ம் ஆண்டு உத்தரவிட்டார்.




இந்த உத்தரவின்படி, படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்கக் கோரிய போது, படம் முழுமையாக முடியவில்லை என கூறப்பட்டது. மேலும் இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால், தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய ஈசன் புரொடக்ஷன்ஸ் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. பல முறை அவகாசம் கேட்கப்பட்டதால், இதை ஏற்க மறுத்த நீதிபதி, சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையை மார்ச் 5ம் தேதிக்கு தள்ளி வைத்தும்  உத்தரவிட்டார்.


இந்நிலையில், நடிகர் சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஜப்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வீடு, தனது சகோதரர் பிரபுவுக்கு சொந்தமானது என்றும் அந்த வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லாததால் ஜப்தி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்