பெங்களூரு: காவிரிப் பிரச்சினை தொடர்பாக இரு மாநிலத் தலைவர்களும் பேசீித் தீர்வு காண வேண்டும் என்று கன்னட நடிகர் சிவராஜ் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
காவிரியில் தண்ணீர் தர கர்நாடகா மறுத்து வருகிறது. எங்களிடம் தண்ணீர் இல்லை என்று அது கூறுகிறது. ஆனால் கர்நாடகத்திடம் போதிய அளவுக்கு தண்ணீர் உள்ளது. ஆனாலும் தர மாட்டேன் என்று மறுப்பதாக தமிழ்நாடு கூறி வருகிறது.

இந்த விவகாரம் தற்போது சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. மத்திய அரசு, கர்நாடகம், காவிரி மேலாண்மை வாரியம் என அனைவருமே தமிழ்நாட்டுக்கு ஆதரவாக இல்லை. எனவே சுப்ரீம் கோர்ட்டில்தான் நமக்குத் தீர்வு கிடைக்கும் என்று தமிழ்நாடு அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
Video: சிவராஜ் குமார் கோரிக்கை
இந்த நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், விவசாயிதான் நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகளுக்கு காவிரிதான் முதுகெலும்பு. விவசாயிகள் ஏற்கனவே போதுமான மழை இல்லாமல் சிரமத்தில் உள்ளனர். இரு மாநிலத் தலைவர்களும், கோர்ட்டும் அனைத்து நிலவரங்களையும் ஆராய்ந்து, உரிய சுமூகத் தீர்வைக் காண முயல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை: இதற்கிடையே, கர்நாடக அரசு தொடர்ந்துள்ள வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. காவிரியில் விநாடிக்கு 5000 கன அடி நீர் திறக்க காவிரி நீர் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருந்தது. கர்நாடகத்தில் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தால், ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய அது கோரிக்கை விடுத்திருந்தது. அநத மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
எனக்கும் கடிதம் வந்தது!
{{comments.comment}}