மும்பை: அகமதாபாத்தில் 241 பேர் பலியான ஏர் இந்தியா விமான விபத்தில் சதி நடந்திருக்கலாம் என சிவசேனா (UBT) எம்.பி. சஞ்சய் ராவத் சந்தேகம் கிளப்பியுள்ளார்.
இந்தியாவின் ராணுவ கட்டமைப்புகளை எதிரி நாடுகள் சைபர் தாக்குதல்கள் மூலம் குறிவைக்க முயற்சிப்பது போல, விமானத்தின் அமைப்பிலும் ஏதேனும் சைபர் தாக்குதல் நடந்ததா என்றும் அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், நான் ஒரு நிபுணர் அல்ல, ஆனால் அகமதாபாத்தில் புறப்பட்ட 30 வினாடிகளுக்குள் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் சதி நடந்திருக்கலாம் என தீவிர சந்தேகம் எழுகிறது. நம்முடைய ராணுவ கட்டமைப்புகளை சைபர் தாக்குதல்கள் மூலம் குறிவைக்க முயற்சிக்கும் எதிரி நாடுகள், விமானத்தின் அமைப்பில் ஏதேனும் சைபர் தாக்குதல் நடத்தினவா? என்று நாம் ஆராய வேண்டும்.
மேலும் அவர் கூறுகையில், விமானப் போக்குவரத்துத் துறைக்கு பராமரிப்பு மிக முக்கியம். போயிங் ஒப்பந்தம் நடந்தபோது பாஜக அதற்கு எதிராக இருந்தது, அப்போது பிரபுல் படேல் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். இப்போது மக்கள் விமானத்தில் பயணிக்க பயப்படுகிறார்கள். விமானப் போக்குவரத்துத் துறைக்கு பராமரிப்பு மிக முக்கியம்.

அகமதாபாத்தில் பராமரிப்பு ஒப்பந்தம் யாரிடம் உள்ளது? ஏன் அகமதாபாத் இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது? அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானத்திற்கு ஏன் விபத்து ஏற்பட்டது? விமான விபத்து நடந்த இடத்தில் அமைச்சர்கள் நடந்து கொண்ட விதம் மிகவும் வருத்தமளிக்கிறது என்றார் அவர்.
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து காட்விக் விமான நிலையத்திற்கு (லண்டன்) புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்குள்ளானதற்கான காரணங்களை ஆய்வு செய்ய ஒரு உயர்மட்ட பல்துறை குழுவை அரசு அமைத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் இருந்து காட்விக் விமான நிலையத்திற்கு (லண்டன்) சென்ற ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்குள்ளானதற்கான காரணங்களை ஆய்வு செய்ய ஒரு உயர்மட்ட பல்துறை குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு தற்போதுள்ள நிலையான இயக்க நடைமுறைகள் (SOPs) மற்றும் அத்தகைய சம்பவங்களைத் தடுக்கவும் கையாளவும் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களை ஆய்வு செய்யும். எதிர்காலத்தில் அத்தகைய நிகழ்வுகளைக் கையாளுவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை பரிந்துரைக்கும் என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு...மாவட்ட வாரியாக நீக்கப்பட்டவர்கள் விபரம்
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முழுமையாக ஒழிக்கவே பெயர் மாற்றம் - திருமாவளவன்
செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்
திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி
அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!
பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு
விஜய் தான் களத்தில் இல்லை.. திடீரென வருகிறார்.. திடீரென காணாமல் போகிறார்: தமிழிசை செளந்தரராஜன்
ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... ஜன.,5ம் தேதிக்குள் வெளியிட சென்னை ஐகோர்ட் உத்தரவு!
{{comments.comment}}