குத்துபாட்டிற்கு நடனமாடும் ஸ்ரேயா...அடுத்த ஹிட் பாட்டு ரெடி

Nov 12, 2025,01:20 PM IST

சென்னை: நான் வயலன்ஸ் என்ற திரைப்படத்தில் கனகா என்ற குத்துப்பாட்டிற்கு நடிகை ஸ்ரேயா சரண் நடனமாடியுள்ளார்.


ஸ்ரேயா சரண் 2001ம் ஆண்டு தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானவர். அதன்பின்னர் தெலுங்கில் பல படங்களில் நடித்தார். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை இவர். ஸ்ரேயா சரண் ஒரு பிரபலமான இந்திய நடிகையும் ஆவார். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அவர் ஒரு நடனக் கலைஞரும் கூட. 




எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2006ம் ஆண்டு  தனுசுடன் திருவிளையாடல் ஆரம்பம், 2007 ஆம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்துள்ளார்.  விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன்பின்னர் இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தில் வடிலேலுவுடன் ஒரு பாடலுக்கு நடனமாடினார். 


2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பின்னர் நடிப்பில் இருந்து விலகி இருந்தார். தற்போது, சிரிஷ் நடிக்கும் 'நான் வயலன்ஸ்' திரைப்படத்தில் கனகா என்ற குத்துப்பாடலுக்கு ஸ்ரேயா சரண் நடனமாடியுள்ளார். இப்படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல்  பாடல் நாளை காலை வெளியாகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?

news

முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

news

டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை

news

மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

news

வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்

news

காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு

news

2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்

news

ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!

news

மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

அதிகம் பார்க்கும் செய்திகள்