ஹைதராபாத் : பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை மூலம் உயிரை மாய்க்க முயன்றதாக சொல்லப்படுகிறது.
பிரபல பின்னணி பாடகியான கல்பனா ராகவேந்தர், முன்னணி பாடகர் டி.எஸ்.ராகவேந்தரின் மகள். இவர் ஹைதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இவரது வீடு கடந்த இரண்டு நாட்களாக திறக்காமல் பூட்டி இருந்துள்ளது. அவரை போனில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குடியிருப்பு நிர்வாகத்தினர் சென்னையில் இருக்கும் அவரது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும் தொடர்ந்து கல்பனாவிடம் இருந்து எந்த பதிலும் இல்லாததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்த குடியிருப்பு நிர்வாகம், போலீசாரின் உதவியுடன் கல்பனாவின் வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு மயக்க நிலையில் இருந்த கல்பனாவை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தொடர்ந்து அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது கல்பனாவிற்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு அவர் தற்கொலை மூலம் உயிரை மாய்க்க முயன்றுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
கல்பனா, பல ஹிட்டான பாடல்களை தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் பாடி உள்ளார். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களுடன் அவர் பணியாற்றி உள்ளார். அவர் 2010ம் ஆண்டு மலையாளத்தில் ஸ்டார் சிங்கர் பட்டத்தையும் வென்றுள்ளார். 5 வயதில் தன்னுடைய இசை பயணத்தை துவங்கிய கல்பனா 1500 பாடல்களை பல்வேறு மொழிகளில் பாடி உள்ளார். போடா போடா புண்ணாக்கு போடாத தப்புக் கணக்கு பாடல்தான் கல்பனா பாடிய முதல் பாடலாகும். அந்தப் பாடலே அவரது அடையாளமாக இன்று வரை உள்ளது.
1986ம் ஆண்டு கமல் நடித்த புன்னகை மன்னன் படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும் அறிமுகமாகி உள்ளார். தெலுங்கு பிக்பாஸ் முதல் சீசனில் இவர் போட்டியாளராக கலந்த கொண்டுள்ளார். இவர் பாடிய பாடல்களில் மாமன்னன் படத்தில் "கொடி பறக்குற காலம்" , 36 வயதினிலே படத்தில் "நான் போகிறேன்" ஆகிய பாடல்கள் சமீப காலத்தில் ஹிட் ஆன பாடல்கள் ஆகும்.
மிகவும் கலகலப்பாக இருக்கக் கூடியவர் கல்பனா. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் போட்டித் தொடரில் நடுவராக பங்கேற்றப்போது அவர் மிகவும் ஜாலியாக பங்கேற்பார். பேசுவார். அப்படிப்பட்டவருக்கு என்ன பிரச்சினை இப்படி ஒரு முடிவை எடுக்கும் அளவுக்கு என்ன மன அழுத்தத்தில் அவர் இருந்தார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
வரைவு வாக்காளர் பட்டியல் வந்ததும் நாம் இன்னும் தீவிரமாக பணியாற்ற வேண்டும்.: முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அனைவரும் கம்பி எண்ணப்போவது உறுதி: எடப்பாடி பழனிச்சாமி
அப்பா வின் ஆட்சியில் தொடர்ந்து காணாமல் போகும் அப்பாவி குழந்தைகள்: நயினார் நாகேந்திரன்
புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்... தவெக தொண்டர்களுக்கு வெளியாகியுள்ள அறிவிப்பு என்ன தெரியுமா?
என் திரை வாழ்வை சீர்குலைக்க நடந்த சதி செயல்: நடிகர் திலீப் பேட்டி
ஒரு வாரமாக பயணிகளைப் படுத்தி எடுத்த இண்டிகோ.. முழுக் கட்டணத்தையும் திருப்பித் தர முடிவு
பெத்லஹேமில்.. 2 ஆண்டுகளுக்குப் பிறகு.. களை கட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!
திருநாவுக்கரசரால் பாடப் பெற்ற திருகொண்டீஸ்வரம் .. பசுபதீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ர யாகம்
எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை...வெள்ளியின் விலை நிலவரம் என்ன தெரியுமா?
{{comments.comment}}