சென்னை: பிரபல பாடகர் வேல்முருகன் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரியிடம் விதிமுறைகளை மீறி தாக்குதலில் ஈடுபட்டதாக அவரை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
சென்னை விருகம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக அப்பகுதியில் உள்ள ஆற்காடு சாலையில் வாகனங்கள் செல்லக்கூடாது என பேரிகார்ட் போட்டு தடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆர்காடு சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு விருகம்பாக்கம் ஆற்காடு சாலை சிக்னல் அருகே பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு போடப்பட்டிருந்த பேரிகார்டை நகர்த்தி விட்டு காரில் செல்ல முயன்று உள்ளார்.
அங்கிருந்த மெட்ரோ ரயில் பணி நிறுவனத்தின் மேலாளர் வடிவேல், வேல்முருகன் செய்த செயலை பார்த்துள்ளார். பின்னர் வேல் முருகனிடம் சென்று மெட்ரோ பணிகள் நடந்து வருவதால் வாகனங்கள் இப்பகுதிகளில் செல்லக்கூடாது எனக் கூறினார்.

அதிகாரியின் வார்த்தைகளை கேட்காமல் வேல்முருகன் விதிகளை மீறி அப்பகுதிக்குச் செல்ல முயன்றுள்ளார்.அப்போது வேல்முருகனுக்கும் உதவி மேலாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. அப்போது, கோபமடைந்த வேல்முருகன், மெட்ரோ ரயில் அதிகாரியை கடும் வார்த்தைகளால் பேசியுள்ளார். பின்னர் சரமாரியாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில் அதிகாரிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் ஓடி வந்து அதிகாரியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அதிகாரி வடிவேல் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பின்னணிப் பாடகர் வேல்முருகன் மீது அதிகாரியை தாக்கிய வழக்கில் பிரபல பாடகர் வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!
"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!
சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்
{{comments.comment}}