சென்னை: பிரபல பாடகர் கே.ஜே.யேசுதாஸ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வந்த செய்தியை அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுத்துள்ளார். தனது தந்தை நலமாக இருப்பதாகவும், வெளியானது தவறான செய்தி என்றும் அவர் விளக்கியுள்ளார்.
கர்நாடக இசை கலைஞரும், பிரபல பின்னணிப் பாடகருமான கே.ஜே யேசுதாஸ் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரின் தனித்துவமான காந்தக் குரலால் மக்களிடையே ஈர்க்கப்பட்டு மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு,கன்னடம், வங்காளம், குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி, ஒரியா, சமஸ்கிருதம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்தியுள்ளார். இவர் முதன் முதலில் 1962 ஆம் ஆண்டு மலையாள மொழியில் பின்னணி பாடகராக அறிமுகமானார்.
இவரின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் தமிழ் சினிமாவில் யேசுதாஸுக்கு வாய்ப்புகள் கிடைத்து கொஞ்சம் குமரி படத்தின் பாடல்கள் மூலம் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல், விஜய், அஜித், என முன்னணி நட்சத்திரங்களுக்கு பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். தனது வசீகரிக்கும் குரலால் ரசிகர்கள் பட்டாளத்தை பெற்ற யேசுதாஸ் தமிழில் 700க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இதுவரை எந்த பாடகர்களும் சாதிக்காத சாதனையை யேசுதாஸ் நிகழ்த்தியுள்ளார். அதாவது பல்வேறு மொழிகளில் பின்னணி பாடகராக வலம் வந்த யேசுதாஸ் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடி, 45 முறை சிறந்த பாடகர் விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது யேசுதாஸின் மகனான விஜய் யேசுதாஸும் பின்னணி பாடகர் ஆக இருக்கிறார்.
தற்போது 85 வயதாகும் யேசுதாஸுக்கு வயது மூப்பின் காரணமாக திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின. இதனால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்தனர். ஆனால் இந்த செய்தியை அவரது மகன் விஜய் யேசுதாஸ் மறுத்துள்ளார். அப்படியெல்லாம் இல்லை. அப்பா நலமாக இருக்கிறார். வெளியானது தவறான செய்தி என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் யேசுதாஸுக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், உண்மையில் யேசுதாஸ் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அவர் நலமுடன் இருக்கிறார் என்று விளக்கியுள்ளனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}