அதிமுக-பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல்.. அதில் ஏறுவோரும் மூழ்கடிக்கப்படுவார்கள்: செல்வப்பெருந்தகை

Jan 21, 2026,05:00 PM IST

சென்னை: மோடி ஒருமுறை அல்ல 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக-பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல். அதில் ஏறுவோரும் சேர்ந்தே மூழ்கடிக்கப்படுவார்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.


இது குறித்து இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசுகையில், என்.டி.ஏ கூட்டணி ஒரு பொருந்தா கூட்டணி.. பேராசை படையெடுப்பை தமிழக மக்கள் முறியடிப்பார்கள்.

இயற்கைக்கு முரணான கூட்டணி தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. தமிழ்நாட்டு மக்கள் அந்த கூட்டணியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருக்கும் அமமுகவின் தலைவர், நேற்று வரை துரோகி என்றும் உலகத்திலே பட்டம் கொடுக்க வேண்டும் என்றால் இப்படிப்பட்ட துரோக பட்டத்தை உலகமே கண்டிருக்காது என எடப்பாடியை பேசி இருக்கிறார். 




இந்த கூட்டணி தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட கூட்டணி. மோடி ஒருமுறை அல்ல 100 முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதிமுக-பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல். அதில் ஏறுவோரும் சேர்ந்தே மூழ்கடிக்கப்படுவார்கள். 


திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்காது என்று தமிழிசை கூறுவது அறியாமையால் மட்டுமே. திமுக கூட்டணி என்பது வலுவான கூட்டணி. சந்தர்ப்பவாதத்திலும் தோல்வி பயத்திலும் டிடிவி தினகரன் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். அவர்களின் செல்வாக்கு தமிழ்நாட்டில் ஒருபோதும் செல்லாது என்று  தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்