Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?

Jul 26, 2025,12:11 PM IST

சென்னை: பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வரும் டூட் படத்தில் அவருக்கு ஒரு லீடிங் ஹீரோ கேமியோ ரோல் செய்வதுதான் இப்போது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.


கோமாளி படம் மூலம் பட்டையைக் கிளப்பும் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்த படமான லவ் டுடே படத்தில் ஹீரோவாகி விட்டார். அது மிகப் பெரிய ஹிட்டாக மாறவே, தொடர்ந்து இப்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவர் நடித்த டிராகன்  படமும் சூப்பர் ஹிட் படமானது. இதனால் அவரது கிராக்கியும் உயர்ந்துள்ளது.




தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் டூட் என இரு படங்களில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இதில் டூட் படத்தில் அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்து வருகிறார்.  இப்படமும் காமெடி கலந்துதான் உருவாகிக் கொண்டிருக்கிறதாம். இப்படத்தில்தான் ஒரு முக்கிய நடிகரை கேமியோ செய்ய வைத்துள்ளனர்.


அந்த முக்கிய நடிகர் வேறு யாருமல்ல நம்ம சிவகார்த்திகேயன்தான். இருவரும் பைக்கில் போவது போல ஒரு வீடியோ வெளியாகி இவர்களது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இன்னும் படக் குழு இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. விரைவில் செய்தி வருமாம்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Deepavali Special Buses: தீபாவளி பண்டிகை - தமிழ்நாடு முழுவதும் 15,659 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

news

தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: டிசம்பர் 20-க்குள் நடத்த தேர்தல் ஆணையம் திட்டம்!

news

ரூ.100-க்கு 10 காய்கறிகள்! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத்துறை அதிரடி அறிவிப்பு!

news

எம்.ஜி.ஆருடன் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் நடித்து பிரபலமான.. தாய்லாந்து நடிகை மரணம்!

news

சென்னையில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!

news

2027 உத்திரப் பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: அகிலேஷ் யாதவ் அதிரடி அறிவிப்பு!

news

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை: சவரன் ரூ.1,04,800-ஐ தொட்டது! அதிர்ச்சியில் மக்கள்

news

டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை ஒப்படைத்தால் வங்கிக் கணக்கில் ரூ.10 வரவு

news

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

அதிகம் பார்க்கும் செய்திகள்