சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தனது அலுவலகத்தில் கொண்டாடிய ஆயுத பூஜை குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து சமீபத்தில் சர்ச்சை வெடித்தது. இசையமைப்பாளர் டி இமான் அளித்த ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் இழைத்து விட்டதாக கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் என்ன துரோகம் செய்தார் என்பதை இமான் தெரிவிக்கவில்லை. இதனால் ஒவ்வொருவரும் வாய்க்கு வந்ததையெல்லாம் விவாதிக்க ஆரம்பித்தனர்.
இந்த விவகாரம் குறித்து சிவகார்த்திகேயன் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. அவர் கருத்து தெரிவிக்காமல் அமைதி காப்பதால் இந்த விவாதமும் முற்றுப்புள்ளி வைக்கப்படாமல், கமா போட்டு போய்க் கொண்டேதான் இருக்கிறது.
இந்த நிலையில் சத்தம் போடாமல், எளிமையாக தனது அலுவலகத்தில் ஆயுத பூஜையைக் கொண்டாடியுள்ளார் சிவகார்த்திகேயன். நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்கே புரடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தான் நடிக்கும் படங்களை தானே தயாரிக்கவும் செய்கிறார். அந்த நிறுவன அலுவலகத்தில் இன்று ஆயுத பூஜை கொண்டாடினார் சிவகார்த்திகேயன்.
மிகவும் எளிய முறையில் கொண்டாடப்பட்ட இந்த ஆயுத பூஜை விழாவில் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள் என்பது குறித்துத் தெரியவில்லை.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!
இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)
தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்
அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!
பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்
ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்
{{comments.comment}}