சென்னை: அமரன் திரைப்படத்தில் மறைந்த ராணுவ வீரர் முகுந்த வரதராஜனாக நடித்த சிவகார்த்திகேயனுக்கு சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் கெளரவம் செய்துள்ளது.
கமல்ஹாசன் தயாரிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் அமரன். இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் வீர மரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார் ராஜ்குமார் பெரியசாமி. சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக வசூலை ஈட்டிய படமாக இது அமைந்துள்ளது.
இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. இந்த படம் வெளியான 3 நாட்களிலேயே உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில், தற்போது இதன் வசூல் 350 கோடியை நெருங்கி வருகின்றது. கடந்த 2014ம் ஆண்டு காஷ்மீரில் உள்ள சோபியான் மாவட்டத்தில் பொதுமக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் தனது இன்னுயிரை தியாகம் செய்தார் மேஜர் முகுந்த் வரதராஜன். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக ஆர்மி பயிற்சி அகாடமியில் சிவகார்த்திகேயன் பயிற்சி பெற்றதாகவும், துப்பாக்கி எப்படி பிடிப்பது,எப்படி சுடுவது என்பதற்காக பயிற்சி பெற்ற பிறகு தான் படத்தில் நடித்ததாக அவரே பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்த படத்தின் கதையை உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்து அனுமதி வாங்கி பிறகு தான் திரையரங்குகளில் வெளியிட்டு இருந்தார்களாம்.
இந்நிலையில் சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாடமியை சேர்ந்த அதிகாரிகள் அமரன் திரைப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடித்த சிவகார்த்திகேயன் மிகச் சிறப்பாக நடித்தார் என்று கூறி அவரை கெளரவித்து பாராட்டியுள்ளனர். இந்த கெளரவத்தால் தான் நெகிழ்ச்சி அடைந்திருப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. இப்படித்தான் செய்யப் போகிறோம்.. அமுதா ஐஏஎஸ் விளக்கம்!
தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!
எம்ஜிஆர் சிவாஜி மட்டும் இல்லை.. விஜய் சூர்யாவுடனும் கலக்கிய சரோஜாதேவி!
எம்ஜிஆர் - சிவாஜி கணேசன்- ஜெமினி கணேசன்.. 3 ஸ்டார்களுடன் போட்டி போட்டு நடித்தவர் சரோஜா தேவி!
Sarojadevi is no more: "கன்னடத்து பைங்கிளி" நடிகை சரோஜா தேவி காலமானார்!
தமிழக வெற்றிக் கழகம்.. நடிகர் விஜய்யின் அரசியல் பாதை சரியாக போகிறதா?
"Crush" என்னும் ஆங்கில வார்த்தையின் அர்த்தம் புரியாத பருவத்தில் நாங்கள் ரசித்த சரோஜாதேவி!
சூதாட்ட நிறுவனங்கள் மீது திமுக அரசுக்கு பாசமா? டாக்டர் அன்புமணி ராமதாஸ் கேள்வி
காதல் கணவரைப் பிரிந்தார் சாய்னா நேவால்.. தனித் தனிப் பாதையில் செல்ல முடிவு என்று தகவல்!
{{comments.comment}}