சென்னை: தமிழ் சினிமா உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர்.முருகதாஸ் பெரிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்கத்தில் பிசியாகவுள்ளார்.
சிவகார்த்திகேயனை வைத்து தனது புதிய படத்தை இயக்க உள்ளார் முருகதாஸ். இதனை சிவகார்த்திகேயனே தனது டிவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
தீனா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். விஜயகாந்த்தின் ரமணா, சூர்யாவின் கஜினி, 7ஆம் அறிவு, விஜய்யின் துப்பாக்கி, கத்தி, சர்கார், ரஜினியின் தர்பார் உள்ளிட்ட பல முன்னனி நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்குவதோடு மட்டுமல்லாமல் படங்களையும் தயாரித்தும் வருகிறார்.
இந்நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் அவரது அடுத்த படத்தின் தகவலையும் வெளியிட்டுள்ளார். அதன்படி, சிவகார்த்திகேயன் நடிக்கும் 23வது படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளதாக சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தகவலை தெரிவித்துள்ளார்.
இந்த படம் குறித்து சிவகார்த்திகேயன், எனது 23வது படத்துக்காக உங்களுடன் இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் சொன்ன கதையைக் கேட்டு இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படம் எனக்கு எல்லா அம்சங்களிலும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். மேலும் படப்பிடிப்பை தொடங்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்தப் படத்தின் கதையை முதலில் ஏ.ஆர்.முருகதாஸ் ஷாருக்கானிடம் சொல்லி இருக்கிறார். அதற்கு ஷாருக்கானும் ஓகே சொல்லியிருக்கிறார். ஏதோ காரணத்தினால் அவர் நடிக்க முடியாமல் போக, அந்தக் கதையைத்தான் சிவகார்த்திகேயனை வைத்து முருகதாஸ் இயக்குகிறார் என்று தகவல் கசிந்துள்ளன.
ஏ.ஆர். முருகதாஸ் கடைசியாக இயக்கிய சில படங்கள் சரியாக போகவில்லை என்ற பேச்சு இருந்தது. இதனால் வலுவான கதையுடன் அடுத்து களம் இறங்க திட்டமிட்டிருந்தார் முருகதாஸ். இந்த நிலையில் ஹாட்டான நடிகர் சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கிறார் முருகதாஸ்.
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
{{comments.comment}}