விருநகர்: சிவகாசி அருகே நடந்த வெடி விபத்தில் 10 பேர் உயிர் இழந்தனர். இந்த விபத்தில் , ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிர் இறந்தனர். அவர்களின் உடல்களை வாங்க உறவினர்கள் மறுத்து வந்த நிலையில், காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து உடலை வாங்க சம்மதம் தெரிவித்தனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்டாண்டர்ட் காலனியைச் சேர்ந்தவர் சரவணன். இவருக்கு வயது 55. இவர் நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறையில் உரிமம் பெற்று கீழதிருத்தங்கல் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட செங்கமலப்பட்டியில் சுதர்சன் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் ஆலை உரிமையாளர் உட்பட 4 பேரை சிவகாசி கிழக்கு போலீசார் கைது செய்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலையை குத்தகைக்கு எடுத்து அதிக ஆட்களை வைத்து தடை செய்யப்பட்ட சரவெடிகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் திறந்த வெளியில் பட்டாசுகள் அதிக அளவில் வைத்திருந்ததும் தான் வெடி விபத்திற்கு காரணமாக செல்லப்பட்டு வருகிறது.
இந்த வெடி விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த முத்து, ஆவுடையம்மாள், லட்சுமி, பேச்சியம்மாள் ஆகியோரின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் இழப்பீடு வழங்க உறவினர்கள் கோரிக்கை வைத்து, உடலையும் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் காவல்துறையினர் இறந்தவர்களின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}