மறு பக்கம்!

Nov 16, 2026,04:09 PM IST

- சிவசத்தியா, காரைக்குடி  


இயற்கையின் வழித் தோன்றலாய்  

கூ  வதன்  தோற்றத்தில்... 

முன்னம் ஒரு துளியாக மூல

உயிராற்றலில்

ஓக நிலையில்


இருப்பாய் மலர்ந்து

ஈர்ப்பு ஆற்றலால் 


இறக்கைகளாக மாறி

பூச்சியாக  கூட்டை

உடைத்து


 வெளிவரும்

பூச்சி மணம்


 உணர்ந்து 

தேனமுதெடுத்து


மலருக்கு மலர் தாவித்




தன்னழகை விரித்து 

மகரந்தச்  சேர்க்கை

 யூட்டி   


இயற்கைக்கு

அழகு  படைக்கும் 


நான்கறிவுயிறே

பிறர்  வளம்  பறித்து


வாழும் குறையறிவு 

கொண்டோர் பூமியிலே


வாழ்வதெங்கே? யென


வட்டமடிக்கும்  வண்ணத்துப் பூச்சியே


வாழ்வு எட்டிற்குள் 

மறு பக்கத்தைத் 


தேடியலை கின்றாயோ?


ஆறறிவு மாந்தனுக்கும்


உன் தெய்வீகத்  தேடல்

ஊக்கமெடுத்தால்


இயற்கையும் உவகை

கொள்ளும் 


எழுச்சி மிக்க ஆற்றல் 

கொண்டே.!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்