அற்புத மருத்துவம்.. அக்குபஞ்சரில் நிரந்தரம்!

Nov 16, 2026,04:13 PM IST

- டாக்டர் எஸ்.மணிமேகலை, ஈரோடு


அன்பான அனைத்து உள்ளங்களுக்கும் உலக அக்குபஞ்சர் தின நல்வாழ்த்துக்கள்


இன்றைய மாற்று மருத்துவத்தில் மருந்து மாத்திரைகள் இல்லாது நிரந்தர தீர்வு கிடைக்கிறது என்றால் அக்குபஞ்சர் மருத்துவம் மட்டுமே.


எந்த நோய் இருப்பினும் நம் உடம்பில் உள்ள 12 உறுப்புகளின் நாடியை பார்த்து அதற்கு ஏற்றார் போல் மெலிதான ஊசிகளை 10 நிமிடம் உடலில் செருகி எடுத்து விடுவது. அவ்வளவே.  நம் உடலில் முழுவதுமாக 12 உறுப்புகளுக்கும் மொத்தமாக.  361 புள்ளிகள் உள்ளன


(Body acupuncture) - இதயம் சிறுகுடல் நுரையீரல். பெருங்குடல். இரைப்பை மண்ணீரல் கல்லீரல் பித்தப்பை. சிறுநீரகம் சிறுநீர்ப்பை, இதயத்தை சுற்றி பாதுகாக்கும் ஒரு உரை போன்ற பெரி கார்டியம். மூன்று வெப்பமண்டலம் என்னும் (Triple warmer) மற்றும் முதுகுத்தண்டு DU...உடலின் முன்பக்கம் வயிற்றுக்கு மேலும் கீழுமாக (REN)என்ற மெரிடியன் பாதைகளும் உள்ளன.


இந்த 12 உறுப்புக்களும் சரியாக வேலை செய்தால் மட்டுமே நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். வலது மணிக்கட்டிலும் இடது மணிக்கட்டிலும் ஆக நாடி பார்த்து நோயின் தன்மையை ஒரு அக்குபஞ்சர் மருத்துவரால் அறிய முடியும்.




உடல் நோய் தன்மை ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம் என்று எடுத்துக் கொண்டால் மனம். மன அமைதி இல்லாத போகும்போது மன அழுத்தம் அதிகமாகும் போது நோய் தன்மை ஏற்படுவதற்கு காரணமாகின்றது. உடல் அதிக உஷ்டமாகும் போதும் இந்நிலை ஏற்படும்.


இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மன அழுத்தம் உள்ளது.

வாழ்க்கை நடைமுறையில் இதை நாமே ஓரளவு சரி செய்து கொள்ள முடியும். சரியான நேரத்திற்கு சாப்பிடுவது .. அளவாக சாப்பிடுவது. சரியாக ஒரு 7 மணி நேரம் அளவிலாவது தூக்கம். சிறிய அளவிலாவது உடற்பயிற்சி எடுப்பது. முத்திரைகள் பயன்படுத்துவது ஒரு பத்து நிமிட நடை பயிற்சி இதனை எல்லாம் வழக்கமாக்கிக் கொள்ளலாம்.


காது மடல்களிலும் காதை சுற்றியும் 12 உறுப்புகளுக்கான புள்ளிகள் உள்ளன இவை...ஆரிக்குலர். இது தவிர தீராத மைக்ரின் தலைவலி பல வருடங்களாக இருந்து கஷ்டப்படுபவர்களுக்கு நிரந்தர தீர்வு கண்டிப்பாக அக்குபஞ்சர் மருத்துவத்தில் உண்டு என்று ஒரு மருத்துவராக ஆணித்தரமாக இயம்புகிறேன்.


தலையிலும் தலையைச் சுற்றிலும் மிகச் சிறிய ஊசிகள் செருகி எடுக்கப்படும் 10 நிமிட நேரம்தான். ஒரு மாதத்தில் 15 முறையாவது எடுத்தால். முற்றிலும் குணம் தெரியும்.


Head acupuncture..Y.N.S.A. மருத்துவம் கடல் போல இருக்கிறது முடிவாக  ஒரு கவிதையுடன் ..........


அக்குபஞ்சர் மருத்துவம் ஓர் அற்புதம் நிறைந்த மருத்துவம்

நாடி வந்தோரை சற்றே ஆசுவாசப்படுத்தி

நாடி பார்த்தே கை கொடுக்கும் வைத்திய நேர்த்தி


வலியில் துவண்டு வருவோர்க்கு பத்து நிமிடத்தில் நெகிழ்ச்சி

வலியெல்லாம் பறந்தது வந்தோர்க்கு மனம் எல்லாம் மகிழ்ச்சி


மருத்துவம் அங்கே பார்த்தோம் இங்கே பார்த்தோம் 

பணத்தை வாரி வாரி இறைத்தோம் 

மனவலியோடே வாழ்கிறோம் என்போர்க்கு

ஆரோக்கிய வரப் பிரசாதமே அக்குபஞ்சர் மருத்துவம்


நெடுநாள் தூக்கமின்மை ..நீடித்த கால் வலி

இறுக்கிப் பிடிக்கும் இடுப்பு வலி ..தீரா தலைவலி


மாத்திரை விழுங்கியே மனம் பேதலித்து.....

ரசாயன கலவையாய் வண்ண வண்ண மாத்திரைகள்

ரணமாய் மனதிற்குள் தீர்க்க முடியாத வேதனைகள்

நோயின் தன்மை நாடியில் அறிந்து

நோகாமல் ஊசிகளை உடம்பில் செலுத்தி

இரத்த ஓட்டத்தை சீராக்கி ...தசை இறுக்கம் தளர்வுறச் செய்து...

தேங்கி நிற்கும் கழிவுகளை எளிதாக வெளியேற்றி

தேகத்தின் பிணிகளை இனிதே போக்கி

அற்புதம் நடப்பதை பாருங்கள்

அதிசயம் நடப்பதை பாருங்கள்


வந்த நோயை போக்கவும் முடியும்

வராமல் தடுத்து நிறுத்தவும் முடியும்

மருந்துகள் இல்லை மாத்திரைகள் இல்லை

மற்ற பக்க விளைவுகள் இல்லை இல்லவே இல்லை

நல்லதையே நாடுவோம் நலம் பல பெறுவோம்

அக்குபஞ்சரை நாடுவோம் அல்லல் நீங்கி வாழ்வோம்


(கவிதாயினி டாக்டர் எஸ் மணிமேகலை. செட்டிநாட்டை சேர்ந்த இவர் மதுரையில் பிறந்து வளர்ந்து இன்று ஈரோட்டில் சிறந்த அக்குபஞ்சர் மருத்துவராக உள்ளார். மருத்துவம் தவிர்த்து ஆன்மீக சொற்பொழிவு இசை கலை ஓவியத்திறமை மற்றும் பாடும் புலமை மிக்கவர். சிறந்த கவிஞர், எழுத்தாளர். நமது தென் தமிழ் இணையதளத்தில் ... மணிமா .. என்ற பெயரில் செட்டிநாட்டு ரெசிபி எழுதிக் கொண்டிருக்கிறார். தனது பத்தாவது வயதில் மறைந்த கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களிடம் மதுரையில் கவிதாயினி என்ற பெயர் சூட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்