பிராஸ்டிலோவா: ஸ்லேவேக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சரமாரியாக சுடப்பட்டார். படுகாயமடைந்தநிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஸ்லோவேக்கியா தலைநகர் பிராஸ்டிலோவாவிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹான்ல்டோவா என்ற நகரில் அரசு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். சமுதாயக் கூடம் ஒன்றில் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு பிரதமர் பிகோ வந்தபோது, திடீரென ஒரு நபர் சரமாரியாக சுட ஆரம்பித்தார். பிரதமர் பிகோவைக் குறி வைத்து அவர் சுட்டார். பல ரவுண்டு அவர் சுட்டதில் பிகோ படுகாயமடைந்தார். பாதுகாப்புப் படையினர் உடனடியாக அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். படுகாயமடைந்து விழுந்த பிரதமர் பிகோவை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அந்த இடமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.
இந்த சம்பவம் குறித்து ஸ்லோவேக்கியா அதிபர் சுசானா கபுடோவா அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம்தான் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அதில் பிகோவின் பாப்புலிஸ்ட் நேஷனலிஸ்ட் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது என்பது நினைவிருக்கலாம்.
பிரதமர் ராபர்ட் பிகோவின் உடல்நலம் குறித்த மேல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகரிலும், நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் பிகோ, நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்புகளுக்கு எதிரான கருத்தைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}