தவெக ஆட்சி அமைக்க விசிக நிபந்தனையற்ற ஆதரவு?.. ஆனா ஒரு ட்விஸ்ட்!

May 09, 2026,05:09 PM IST

சென்னை : தமிழகத்தில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று மாலை 4 மணிக்கு விசிக தனது முடிவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என கூறப்பட்டுள்ளது.


தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்கு, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் கூறி விட்டார். இதனால் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் தவெக ஆதரவு அளிக்கும் படி கேட்டது. முதல் ஆளாக தனது ஆதரவை விஜய்க்கு தெரிவித்தது 5 இடங்களை வைத்திருக்கும் காங்கிரஸ். இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெக.,விற்கு தங்களின் ஆதரவை தெரிவித்து விட்டன.


இதனால் விஜய் தலைமையில் தவெக தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பலம் 116 ஆக அதிகரித்துள்ளது. இருந்தாலும் பெரும்பான்மையை நிரூபிக்க 118 எம்எல்ஏ.,க்களின் ஆதரவு தேவை என்பதால் 2 எம்எல்ஏ.,க்களை வைத்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் தவெக தொடர்ந்து பேசி வருகிறது. ஆனால் தனது முடிவை அறிவிக்க திருமாவளவன் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறார். அமைச்சர் பதவி, திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி எதிர்பார்ப்பதால் தான் இந்த தாமதம் என சொல்லப்பட்டது. ஆனால் விசிக தரப்பில் இந்த தகவல் மறுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணிக்கு அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படும் என விசிக கட்சி நிர்வாகிகள் கூறி விட்டனர்.




இதனால் திருமாவளவன் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர். இந்த நிலையில், விசிக.,வும் தவெக.,விற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


நிபந்தனையற்ற ஆதரவு என விசிக தரப்பில் சொல்லப்பட்டாலும், ஆதரவு அளிக்க தவெக.,விற்கு 2 கோரிக்கைகளை விசிக முன் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது, சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு தர வேண்டும். ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் ஆகிய 2 கோரிக்கைகளை தவெக தரப்பிடம் விசிக முன் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.


அதிகாரப்பூர்வமாக வரும் வரை எதுவுமே உறுதியில்லை. இதற்கிடையே, ஆளுநர் அர்லேகர் இன்று இரவு கேரளாவுக்குப் புறப்பட்டுப் போகவுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அதற்குள் அவரை சந்திக்க விஜய்யும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை

news

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

news

முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது

news

கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?

news

‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை

news

10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

news

கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து

அதிகம் பார்க்கும் செய்திகள்