முன்னாள் காதலியின் தாயாருடன் கண்ணாமூச்சி ஆடிய சொஹைல் கான்!

Apr 12, 2024,04:41 PM IST

மும்பை:  தனது முன்னாள் காதலியின் வீட்டில் கண்ணாமூச்சி ஆட்டம் விளையாடிய போது எதிர்பாராத விதமாக தனது காதலியின் தாயாருடன் ஒரே இடத்தில் மறைந்து கொண்ட சுவாரசியமான அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகர் சொஹைல் கான்.


நடிகர் சல்மான்கானின் சகோதரர் தான் சொஹைல் கான். இன்னொரு சகோதரர் ஆர்பாஸ்கான். இவர்கள் அனைவரும் இணைந்து ஒரு தொலைக்காட்சி தொடரில் அதாவது ஒரு ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ளனர். அந்த ஷோவில் கலந்துகொண்டு சொஹைல் கான் சில மலரும் நினைவுகளை வெளியிட்டுள்ளார். 


அவர் கூறுகையில் என்னுடைய முன்னாள் காதலி ஒருவரின் வீட்டில் ஒரு முறை நாங்கள் எல்லோரும் கூடி இருந்தபோது கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடினோம். அப்போது நான் ஒரு வார்ட் ரோபில் சென்று ஒளிந்து கொண்டேன். அதே இடத்தில் எனது காதலியின் தாயாரும் வந்து ஒளிந்து கொண்டார். அந்த இடம் இருட்டாக இருந்தால் யார் என்று எனக்கு தெரியவில்லை. நான் உள்ளே எனது காதலி தான் எனக்கு அருகில் ஒளிந்துள்ளார் என்று நினைத்துக் கொண்டு அவரிடம் ஜாலியாக பேசினேன். அதைக் கேட்டு அவர் கலகலவென்று சிரித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. 


சற்று நேரத்தில் விளக்குகள் எல்லாம் போடப்பட்டு ஆட்டம் முடிந்ததாக சொன்ன போது நாங்கள் வெளியே வந்தோம். அப்போது தான் எனக்கு தெரிந்தது. நான் என்னுடைய காதலியின் தாயாரிடம் தான் பேசிக் கொண்டிருந்தேன் என்று கூறி சிரித்தார்.


இதன் பிறகு அர்பாஸ் கான் மகன் அர்கான் கான் தனது அனுபவங்களை கூறினார். இந்த தொடரானது ஆறு எபிசோட் கொண்டதாக ஒளிபரப்பாக உள்ளது. இது ஒரு யூட்யூபில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ ஆகும். இந்த ஷோவில் அர்கான் காணின் தாயாரான மலைக்கா அரோரா மற்றும் சல்மான்கான் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்