படத்தோட பேருதான்  "ஜெர்க்".. பாட்டெல்லாம் செம கிக்.. பாடிருக்கிறது யாருன்னு தெரியுமா?

Jan 05, 2024,01:16 PM IST

சென்னை: இந்த படம் பார்த்தா ஜெர்க் ஆயிடுவீங்க.. எந்த படம் என்று கேட்கிறீர்களா.. படம் பெயரே ஜெர்க் தாங்க.. படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. காரணம், பாடிய பாடகர்கள் அப்படி.


2கே ப்ரொடக்ஷன் என்ற புதிய நிறுவனம் தயாரித்துள்ள படத்திற்கு ஜெர்க் என்ற வித்தியாசமான தலைப்பை வைத்துள்ளனர் படக்குழுவினர். 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவான ஜெர்க் திரைப்படத்தில் அமைந்துள்ள பாடல்கள் நிச்சயம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகும் என பட குழுவினர் கூறியுள்ளனர்.




குரு இயக்கும் ஜெர்க் படத்தில் அப்புக்குட்டி, நாடோடிகள் பரணி, குமர வடிவேல், ராகுல், காயத்ரி, சித்து குமரேசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை ஆலன் பரத் ஒளிப்பதிவு செய்ய, தரண் குமார் இசையமைத்துள்ளார். 


30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு த்ரில்லராக இப்படம்  உருவாகியுள்ளது. இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. பிரபலமான பாடகியான நஞ்சமாள் இதில் முக்கியமானவர். இவர் அய்யப்பனும் கோஷியும் படத்தில் அட்டாசமான பாடலைப் பாடி தேசிய விருது பெற்றவர். அதேபோல வைக்கம் விஜயலட்சுமி, நம்ம ஊர் செந்தில் ராஜலட்சுமி ஆகியோரும்  பாடியுள்ளனர். 




இப்படத்தின் பாடல்கள் நிச்சயம் வெற்றி பெற்று, சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக வலம் வரும் என படக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். பீஸ்ட் படத்தில் ஜாலியோ ஜிம் கானா என்ற பாடலை எழுதிய கார்த்திக் தான் இந்த படத்திலும் பாடல்களை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இப்படத்தைப் பற்றி படக்குழுவினர் கூறுகையில், மலைப்பிரதேசங்களில் இயற்கை வளத்தையும், நம் மண்ணையும் பல தலைமுறைகளாக தங்களது உழைப்பால் பாதுகாத்து வரும் மக்கள் முதலாளித்துவத்தால் இன்று வரை அடிமைப்பட்டு தான் கிடக்கிறார்கள். அவர்களது முன்னேற்றம் இன்று வரை கேள்விக்குறியாக தான் இருக்கிறது. 




அப்படி 30 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத்தொடர்பே இல்லாத தமிழகத்தில் ஒரு முக்கியமான மலைப்பிரதேசத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து முழுக்க முழுக்க திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறோம். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள அடர்ந்த மலைப் பகுதிகளில் நடத்தி இருக்கிறோம் என கூறினார்கள்.


இந்நிலையில் இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் திரையரங்குகளில் வெளியிட இருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Bharathirajan Tamil Short story: காப்பிப் பொடியும் நானும்!

news

Tamil Short story: குழூஉக்குறி.. ஒரு நிமிடக் கதை (13)

news

World Bicyle day: சிக்கு..‌‌ சிக்கு மிதிவண்டி.. சின்னப் பையன் மிதிவண்டி!

news

தர்ஷனின் தரமான சம்பவங்கள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

news

World Bicycle day: ஓரம்போ ஓரம்போ.. இன்னும் சைக்கிள் ஓட்டுபவரா நீங்க.. வாழ்த்துகள்ங்க!

news

விண்ணுலகமே வியந்து போகும்.. அற்புதமாக நடந்தேறிய.. வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்சவம்

news

திமுக.,விற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் கூட்டணி கட்சிகள்.. அடுத்து என்ன நடக்கும்?

news

முதல்வர் விஜய்யுடன் ப.சிதம்பரம் திடீர் சந்திப்பு.. இது தான் காரணமா?

news

இன்னுமா கிராஷ் கோர்ஸ் படிக்கிறீங்க.. இது தான் மாற்றமா? முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

அதிகம் பார்க்கும் செய்திகள்