சென்னை : வழக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சிகளை போல் இல்லாமல் பல எதிர்பாராத ட்விஸ்ட்களுடன் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியை கொண்டு செல்ல நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி 6 சீசன்களை கடந்து, 7 வது சீசன் விரைவில் துவங்கப்பட உள்ளது. வழக்கமாக ஜூலை - ஆகஸ்ட் மாதங்களில் தான் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கப்படும். ஆனால் கொரோனாவிற்கு பிறகு அதில் தாமதமாகவே துவங்கப்பட்டு வருகிறது. தற்போது 7 வது சீசன் அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 6 சீசன்களை போலவே 7வது சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்க போகிறார்.
7வது சீசனை தொகுத்து வழங்குவதற்காக கமலுக்கு ரூ.150 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது போட்டியாளர்களுக்கான ஆடிசன் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. பிரபல செய்தி வாசிப்பாளர் உள்ளிட்ட பலரும் இந்த முறை போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல போகிறார்கள் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, இந்த சீசனில் புதிய ட்விஸ்ட் ஒன்றை அறிமுகம் செய்ய பிக்பாஸ் டீம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த முறை இரண்டு பிக்பாஸ் வீடுகள் அமைக்கப்பட உள்ளதாம். போட்டியாளர்கள் இரு அணியாக பிரிக்கப்பட்டு, இந்த இரண்டு வீடுகளிலும் தங்க வைக்கப்பட உள்ளார்களாம். சில நாட்கள் கடந்த பிறகு அனைவரும் ஒரே வீட்டில் தங்க வைக்கப்படுவார்கள்.
அதேபோல இரண்டு வீடுகளையும் சேர்த்து கிட்டத்தட்ட 76 கேமராக்கள் வைக்கப்படவுள்ளதாம். இதற்கு முன்பு 65 கேமராக்கள் வைக்கப்பட்டிருந்ததாம். வீடு இரண்டாகியுள்ளதால், கேமராக்களும் அதிகரிக்கிறதாம். மேலும் சில பரபரப்பான பிரபலங்களையும் வீட்டுக்குள் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளதாம். அதில் ரேகா நாயரின் பெயர் லிஸ்ட்டில் இருக்கிறதாம். இவருக்கும் பயில்வான் ரங்கநாதனுக்கும் இடையே நடந்த மோதல் உலகம் அறிந்தது. பயில்வான் ரங்கநாதனையும் கூட உள்ளே கொண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளதாம்.
உமா ரியாஸ் கான், பாவனா , மாகாபா என பல விஜய் டிவி பிரபலங்களும் ஹவுஸ்மேட் பட்டியலில் உள்ளார்களாம். இது போல் இன்னும் பல ட்விஸ்ட்களை வைத்து இந்த சீசனை செம ஹிட்டாக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}