சென்னை: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் இன்றும் நாளையும் நல்ல மழை இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவ மழை சில நாட்களுக்கு முன்பு அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழ்நாடு முழுவதும் பரவலாக கன மழை பெய்து தீர்த்தது. தற்போது வடக்கில் மழை அடங்கியுள்ளது. அதேசமயம், மன்னார் வளைகுடாவில் மேகக் கூட்டங்கள் திரண்டு வியாபித்து நிற்பதால், தென் மாவட்டங்களில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் இன்றும் நாளையும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பிருப்பதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள பதிவு:

மன்னார் வளைகுடாவில் மேகக் கூட்டங்கள் திரண்டு நிற்கின்றன. இதனால் ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்றும் நாளையும் கன மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தூத்துக்குடியில் இந்த சீசனின் முதல் பெரிய மழை பெய்யும்.
அதேபோல நாகப்பட்டனம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், மதுரை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் பரவலாக மழைக்கு வாய்ப்புண்டு.
சென்னை முதல் கடலூர் வரையிலான பகுதிகளில் நாளை முதல் மழையை எதிர்பார்க்கலாம். அடுத்த 15 நாட்கள் கொஞ்சம் சுவாரஸ்யமானவை. வெயில் அடிக்கும், திடீரென மழை பெய்யும்.. எனவே இந்தப் பகுதிகளில் வசிப்போர், வெயில் அடிக்குதேன்னு அப்படியே வெளியில் போயிராதீங்க.. கையில் குடையும், ரெயின்கோட்டும் இருக்கட்டும்.
இதேபோல தமிழ்நாட்டின் உட்புற மாவட்டங்களிலும் நாளை முதல் அவ்வப்போது மழையை எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}