சென்னை பீச் டூ தாம்பரம்.. ஜூலை 23 டூ ஆக. 14 வரை.. புறநகர் ரயில்கள் ரத்து.. பிற ரயில்களிலும் மாற்றம்

Jul 17, 2024,09:14 PM IST

சென்னை: தாம்பரத்தில் இரண்டாம் கட்ட பராமரிப்பு பணிகள்  நடைபெற உள்ளதால், வரும்  ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 14 வரை  சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி ஆகிய மார்க்கத்தில் சில ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும், ஒரு சில ரயில்கள் மாற்று வழியில் தாமதமாக  இயக்கப்பட உள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இந்தக் காலகட்டத்தில், தென்மாவட்டங்களில் இருந்து செல்லும் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 


சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் இரண்டாம் கட்ட பராமரிப்பு பணிகள் இந்த மாதம் 23ம் தேதி  தொடங்கி, ஆகஸ்ட் 14 வரை நடைபெற உள்ளது. இதையடுத்து ரயில் சேவையில் பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னை தாம்பரம் வந்தடையும் பல ரயில்கள்  ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு, மாற்று வழியில்  செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




தாம்பரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் 23 ரயில்கள் ரத்து செய்யப்படும். அதற்குப் பதிலாக குறிப்பிட்ட நேரங்களில் சிறப்பு ரயில்கள் பீச் முதல் பல்லவாரம் வரை இயக்கப்படும்.


அதேபோல பீச் முதல் கூடுவாஞ்சேரி, தாம்பரம் இடையிலான 9 ரயில்கள்  ரத்து செய்யப்பட்டு அதற்குப் பதில் சிறப்பு ரயில்கள் குறிப்பிட்ட நேரங்களில் பீச் முதல் பல்லாவரம் வரை இயக்கப்படும். இதேபோல திருமால்பூரிலிருந்து பீச் வரையிலான ரயிலும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


புறநகர் ரயில்கள் ரத்து முழு விவரம்


வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்




வண்டி எண் 20665 – 20666 நெல்லை டூ சென்னை எழும்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், தாம்பரம் டூ சென்னை எழும்பூர் இடையே புறநகர் ரயில் வழித்தடத்தில் இயக்கப்படவுள்ளது. இந்த நெல்லை டூ சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக எழும்பூர் செல்லும். அதேபோல் நாகர்கோவில் டூ தாம்பரம் செல்லும் வண்டி எண்.22658, தாம்பரம் ரயில் நிலையத்திற்கு பதிலாக சென்னை எழும்பூர் வரை மட்டுமே இயக்கப்படவுள்ளது.


வண்டி எண்.20683 தாம்பரம் டூ செங்கோட்டை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வரும் 23ம்தேதி முதல் ஆகஸ்ட் 13ம்தேதி வரை ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய நாட்களில் விழுப்புரம் சந்திப்பில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக வண்டி எண்.20684 செங்கோட்டை டூ தாம்பரம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், வரும் 22ம்தேதி முதல் ஆகஸ்ட் 12ம்தேதி வரை திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் செங்கோட்டையில் இருந்து விழுப்புரம் வரை மட்டுமே இயக்கப்படும். 


அந்தியோதயா ரயில் ரத்து




தாம்பரம் டூ நாகர்கோவில், நாகர்கோவில் டூ தாம்பரம், செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் வரும் ஜூலை 23ம்தேதி முதல் ஆகஸ்ட் 14ம்தேதி வரை  முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.


திருச்செந்தூர் டூ சென்னை எழும்பூர் செல்லும், செந்தூர் எக்ஸ்பிரஸ், ஆகஸ்ட் 14, 15, 16 ஆகிய தேதிகளில் திருச்செந்தூரில் இருந்து விழுப்புரம் வரை மட்டுமே செல்லும். இந்த செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 17ம் தேதியன்று செங்கல்பட்டிலிருந்து புறப்பட்டு காஞ்சிபுரம், அரக்கோணம் வழியாக (மாற்று வழியில்) சென்னை எழும்பூர் சென்றடையும். 


அதே போல் இரவு நேரங்களில் இயக்கப்படும்- நெல்லை, பொதிகை, அனந்தபுரி, பாண்டியன், முத்து நகர், சிலம்பு போன்ற ரயில்கள் வரும் 23ம் தேதி முதல், 30 நிமிடங்கள் தாமதமாக  இயக்கப்படவுள்ளது.  இதுமட்டுமல்லாமல் வைகை ,பல்லவன் எக்ஸ்பிரஸ் போன்ற பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்கத்திலும்  பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.


வெளியூர் ரயில் மாற்றங்கள் குறித்த முழு விவரம்

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்