மாட்ரிட்: தெருவில் நிர்வாணமாக நடக்க உரிமை உண்டு என்று கூறி ஸ்பெயின் நாட்டு கோர்ட் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டின் வெலன்சியா பகுதியைச் சேர்ந்தவர் அலெஜான்ட்ரோ கொலோமார். 29 வயதாகும் இவர் அலடெயா நகரில் நிர்வாணமாக நடந்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார் அலெஜான்ட்ரோ. கோர்ட் விசாரணைக்கும் கூட அவர் நிர்வாணமாகவே வந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட், அலெஜான்ட்ரோ நிர்வாணமாக 2 தெருக்களில் நடந்துள்ளார். அவரது நிர்வாண நடையால் பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. பாலியல் நோக்கத்துடன் அவர் நடக்கவும் இல்லை. எனவே இந்த அபராதம் பொருந்தாது என்று தீர்ப்பளித்தது. அதேசமயம், நிர்வாண நடை தொடர்பான சட்டத்தில் இன்னும் கூடுதல் வலிமை தேவை என்றும் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
பொது இடங்களில் நிர்வாணமாக நடப்பதை ஸ்பெயின் நாடு 1988ம் ஆண்டு சட்டப்பூர்வமாக்கியது. யார் வேண்டுமானாலும் தெருவில் நிர்வாணமாக நடக்கலாம். இருப்பினும் பார்சிலோனா, வெல்லடாலிட் உள்ளிட்ட சில பகுதிகளில் பொது இடங்களில் நிர்வாணமாக நடப்பதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. கடற்கரை பகுதிகளில் மட்டுமே இங்கெல்லாம் நிர்வாணமாக நடக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
எனக்கும் கடிதம் வந்தது!
{{comments.comment}}