சென்னை: தாம்பரம்- திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு அதிவிரைவு ரயில் பொங்கலையொட்டி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வேலை, படிப்பு காரணமாக பெரும்பாலான மக்கள் சொந்த ஊரை விட்டு சென்னையில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு பண்டிகையின் போதும் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கமாக வைத்துள்ளனர்.
சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களுக்குத்தான் அதிக அளவிலான மக்கள் ஒவ்வொரு பண்டிகையின்போதும் செல்வது வழக்கம். அனைவரும் பண்டிகை காலங்களிலும், தொடர் விடுமுறையின் போதும் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பர். அதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு பண்டிகை காலங்களின் போது சிறப்பு ரயில், சிறப்பு பேருந்து, சிறப்பு விமானம் என பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்படும்.

இந்த சிறப்பு வசதிகளினால் கூட்டம் நெரிசல் குறைந்து, சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் நிம்மதியாக சென்று வருகின்றனர். அந்த வகையில், வருகிற பெங்கல் பண்டிகைக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. இதில் ஒரு ரயிலானது திருச்சியில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருச்சியில் இருந்து தாம்பரம் இடையே ஜன் சதாப்தி சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்பட உள்ளது. வண்டி எண் 06190 திருச்சியில் இருந்து தாம்பரம் செல்லும் ரயிலானது திருச்சியில் காலை 5.35 மணிக்கு கிளம்பி தாம்பரத்திற்கு மதியம் 12.30 மணிக்கு வந்தடையும். இந்த ரயிலானது ஜனவரி 4,5,10,11,12,13,17,18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் மறு மார்க்கமாக தாம்பரத்தில் இருந்து மாலை 03.50க்கு கிளம்பி திருச்சிக்கு இரவு 11.35 மணிக்கு சென்றடையும். ஜனவரி 4,5,10,11,12,13,17,18, மற்றும் 19ம் தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பத்ரிப்புலியூர், பன்ருட்டி, விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}