சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 10ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் வேலை படிப்பு காரணங்களுக்காக தங்கியிருப்பவர்கள் தங்கம் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். அதனை ஒட்டி ரயில், பேருந்து, விமான நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
இதனை சரி செய்யும் விதமாக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். அதன்படி, தெற்கு ரயில்வே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பெங்களூரு- சென்னை
ஜனவரி 10ம் தேதி 07319 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் பெங்களூருவில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்ட பிற்பகல் 2.40க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலைத்தை அடையும். அன்றைய தினமே சென்னையில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் 07320 என்ற எண் கொண்ட ரயில் இரவு 10.50க்கு பெங்களூருவை சென்றடையும்.
பெங்களூரு-தூத்துக்குடி
ஜனவரி 10ம் தேதி 06569 என்ற எண் கொண்ட சிறப்பு ரயில் பெங்களூருவில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஜனவரி 11 சனிக்கிழமை காலை 11 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். அதே ரயில் மறுமார்க்கமாக சனிக்கிழமை பிற்பகல் 1மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு ஜனவரி 12 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு மைசூரு வரை செல்லும்.
எர்ணாகுளம்-சென்னை
ஜனவரி 19ம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து மாலை 6.15க்கு புறப்படும் 06046 என்ற எண் கொண்ட ரயில் மறுநாள் ஜனவரி 17ம் தேதி காலை 8.30 மணிக்கு சென்னை சென்றடையும். மறுமார்க்கமாக ஜனவரி 17ம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் ரயில் 06047 என்ற எண் கொண்ட ரயில் இரவு 1 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
திருவனந்தபுரம்-சென்னை
ஜனவரி 15ம் தேதி திருனவந்தபுரத்தில் இருந்து காலை 4.25க்கு புறப்படும் 06058 என்ற எண் கொண்ட ரயில் இரவு 11 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும். மறுமார்க்கமாக ஜனவரி 16ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் 06047 என்ற எண் கொண்ட ரயில் இரவு 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தலைவர் 173.. இயக்குநர் அவரா.. இசையமைப்பாளர் இவரா.. பரபரப்பு முடியலையே!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
என் நலம் விரும்பி. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்கு துணையாக இருந்தவர் ஏவிஎம் சரவணன்: ரஜினிகாந்த்
அந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. இந்தப் பக்கம் பார்த்தாலும் மழை.. டிப்ஸ் கேட்டுக்கங்க!
Kodaikanal calling.. ஏங்க.. எங்க ஊருக்கு வாங்க.. வெள்ளி அருவியில் தண்ணியா கொட்டுதுங்க!!
படிங்க.. படிங்க.. படிச்சுட்டே இருங்க.. கல்வியின் முக்கியத்துவம்!
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
{{comments.comment}}