- ஸ்வர்ணலட்சுமி
சென்னை : நம்முடைய வழிபாட்டு முறைகளில் விளக்கேற்றி வழிபடுவது என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. சாதாரணமாக நாம் தெய்வத்தை வணங்கி, வழிபடுவதை விட, விளக்கேற்றி வைத்து வழிபட்டால் அதன் பலன் பல மடங்கு அதிகமாக கிடைக்கும். வீட்டில் தினமும் காலை மற்றும் மாலையில் விளக்கேற்றுவது அவசியம். இரு வேளையும் விளக்கேற்ற முடியாதவர்கள் ஒரு வேளை மட்டுமாவது விளக்கேற்றி வழிபட வேண்டும்.
தீபத்தில் ஒளிர்விடும் சுடரானது வீட்டில் உள்ள தீப சக்திகளை விளக்கும் தன்மை கொண்டது. வீட்டில் தீபம் ஏற்றுவதால் எதிர்மறை ஆற்றல்கள் விலகும். எந்த வீட்டில் விளக்கு ஏற்றப்படுகிறதோ அங்கு மகாலட்சுமி விரும்பி வந்து குடி கொள்வாள் என்பது ஐதீகம். அதிலும் மகாலட்சுமிக்கு விருப்பமான, மங்களகரமான நாட்களாக கருதப்படும் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் வீட்டில் விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும்.
பெண்கள் வீட்டில் விளக்கேற்றும் போது மனதில் மகாலட்சுமியையும், தீப லட்சுமியையும் மனதார நினைத்துக் கொண்டு விளக்கேற்ற வேண்டும். அப்படி ஏற்றும் போது தீப மகாலட்சுமிக்குரிய போற்றி மாலையை சொல்லியபடி விளக்கேற்றுவதால் மகாலட்சுமியின் மனம் மகிழும் என சொல்லப்படுகிறது.

தீப மகாலட்சுமி போற்றி மாலை:
"ஓம் பொன்னும் பொமெய்ப்பொருளும் தருவாய் போற்றி
ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி
ஓம் முற்றறி வெளியாய் மிளிர்ந்தாய் போற்றி
ஓம் இயற்கை அறிவொளியானாய் போற்றி
ஓம் ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி
ஓம் அளவிலாச் செல்வம் தருவோய் போற்றி
ஓம் ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி!"
தீப மகாலட்சுமிக்குரிய இந்த போற்றி மாலையை தினமும் விளக்கேற்றும் போது சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். மகாலட்சுமியின் அருள் அந்த வீட்டில் எப்போதும் நிறைந்திருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எம்எல்ஏ.க்களுக்கு கார்.. விவாதத்தில் சிக்கிய ஆபர்.. முதல்வர் விஜய்யின் அறிவிப்பு சரியா?
விஜய்யிடம் சீட் கேட்ட அந்த பிரபல டைரக்டர் இவரா? ஹாட் டாக்கான புஸ்ஸி ஆனந்த் பேச்சு
நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் எவ்வளவோ இருக்க.. எம்எல்ஏக்களுக்கு கார் எதுக்கு?.. சீமான்
உத்தரப் பிரதேச நீதிபதியிடமிருந்து 100 கொலை வழக்குகள் அதிரடி மாற்றம்.. அதிர வைக்கும் காரணம்!
செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!
பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!
Varalakshmi Nonbu: வரலட்சுமி நோன்பு.. ஆகஸ்ட் 21ம் தேதியா இல்லை 28ஆ?
பாம்பன் சுவாமிகளே பக்தியின் பெருங்கடலே!
சரியான முடிவு
{{comments.comment}}