புறா காலில் கேமரா.. ராஜா காலத்து டெக்னிக்கை பயன்படுத்தி வேவு பார்த்த உளவாளிகள்!

Mar 09, 2023,04:46 PM IST
பாரதிப் : புறாவின் காலில் கேமிரா,  மைக்ரோசிப் ஆகியவற்றை பொறுத்தி அதன் மூலம் புதுவிதமாக உளவாளிகள் உளவு பார்த்து வந்துள்ள சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. 

ஒடிசாவின் ஜகத்சிங்கபூர் மாவட்டம் பாரதிப் பகுதியில் மீனவ படகு ஒன்றில் புறா ஒன்று வந்து அமர்ந்துள்ளது. அதன் காலில் ஏதோ வித்தியாசமாக இருப்பதையும், அதன் சிறகுகளில் ஏதோ எழுதப்பட்டிருப்பதையும் கண்ட மீனவர்கள், அந்த புறாவை பிடித்து கடற்படை போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

அந்த புறாவின் காலில் பொருத்தப்பட்டுள்ளது எந்த வகையான டிவைஸ் என்பதை கண்டறிய தடய அறிவியல் துறையின் உதவி கேட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. புறாவின் காலில் கேமரா மற்றும் மைக்ரோ சிப் இருப்பது தெரிய வந்துள்ளது. அதன் சிறகில் உள்ளூர் போலீசாரால் கண்டுபிடிக்க முடியாத வகையில் வித்தியாசமான மொழியில் ஏதோ எழுதப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. 




புறாவின் சிறகுகளில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை படிக்கவும் நிபுணர்களிடம் உதவி கேட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கோர்க் கடற்கரை சுற்றுவட்டாரத்தில் கடந்த 10 நாட்களாக 35 கி.மீ., வரை இந்த புறா பறந்து சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த புறாவை அனுப்பி, உளவு பார்த்தது யார், எதற்காக உளவு பார்க்கப்பட்டது என்பது பற்றிய விசாரணை நடைபெற்று வருகிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகளா அல்லது சீனாவிலிருந்து இந்த உளவுப் புறா அனுப்பப்பட்டதா என்பதை அறியும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாடு அரசு சார்பில்.. தேசிய அளவிலான செம்மொழி இலக்கிய விருது.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

தவெக தலைவர் விஜய் இன்று இரவே டெல்லி பயணம்?.. நாளை மீண்டும் சிபிஐ விசாரணை!

news

மக்களே.. நான் நெகிழ்ந்து போயிட்டேன்.. என்னோட மனச ஆழமா தொட்டுட்டீங்க.. ஜீவா உருக்கம்

news

தை அமாவாசை.. ராமேஸ்வரம் உள்பட நீர் நிலைகளில் திரண்ட மக்கள்.. முன்னோர்களுக்கு தர்ப்பணம்

news

தை அமாவாசையின் இன்னொரு சிறப்பு.. அபிராமி அந்தாதி பிறந்த கதை தெரியுமா?

news

எங்கள் வீர தீர விளையாட்டு.. இது விவேகம் நிறைந்த விளையாட்டு!

news

முப்பாலைத் தந்த முழுமதி.. அறம் வளர்த்த பேராசான்.. அக இருள் ஓட்டி அறிவை நட்டாய்!!

news

உழவனின் உயிர் நண்பன்!

news

தை அமாவாசை.. நன்றி மற்றும் ஆன்மீக சிந்தனையின் நாள்!

அதிகம் பார்க்கும் செய்திகள்