கொழும்பு: இலங்கை தற்காலிக பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரியா, முழு நேர பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது அமைச்சரவையில் 24 கேபினட் அமைச்சர்களையும் ஜனாதிபதி அனுரா குமார திசநாயகே நியமித்துள்ளார். அதிபர் அனுரா, பாதுகாப்புத்துறையை தன் வசமே வைத்துக் கொண்டுள்ளார்.
இலங்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில், அனுரா குமார திசநாயகே அபார வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இடைக்கால பிரதமராக டாக்டர் ஹரினி அமரசூரியா நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. அதில் அனுரா திசநாயகேவின் கூட்டணி அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து இன்று புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் பிரதமர், அமைச்சர்கள் பதவியேற்பு நடைபெற்றது. பிரதமராக ஹரினி அமரசூரியா, ஜனாதிபதி அனுரா முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். அதேபோல 24 கேபினட் அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
பிரதமர் ஹரினி, கல்வித்துறை, உயர் கல்வித்துறை மற்றும் வெக்கேஷனல் பயிற்சி ஆகிய துறைகளை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு 159 இடங்களில் வெற்றி கிடைத்தது. இதையடுத்து அது அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. ஆளுங்கட்சி சார்பில் 13 தமிழர்கள் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 28 தமிழர்கள் எம்.பிக்களாகியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!
பொங்கலோ பொங்கல்.. a day of thanking the Sun God bright
பெரும் பொங்கல்!
தைப்பொங்கல்!.. தரணி போற்றும் திருநாள்!
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !
சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்
அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்
{{comments.comment}}