- மஞ்சுளா தேவி
ஸ்ரீவைகுண்டம்: தொடர் கனமழையால் ஸ்ரீ வைகுண்டம் ரயில் நிலையத்தில், ரயிலில் மூன்றாவது நாளாக சிக்கித் தவிக்கும் பணிகளை விமானப்படை உதவியுடன் மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூரில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை செந்தூர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டது. கன மழை கொட்டி தீர்த்த வேளையில் இரவு 9 மணி அளவில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஸ்ரீ வைகுண்டம் அருகே நிறுத்தப்பட்டது. இங்கு மண்ணரிப்பு ஏற்பட்டதால் ரயில்வே பாலம் சேதம் அடைந்தது. இதனால் ரயிலை இயக்க முடியவில்லை. தொடர் கனமழையால் ரயில் நிலையம் முழுவதும் பத்தடி வரை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்த மீட்பு படையினர் ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்ட 800 பேரில் 300 பேர் மட்டும் மீட்டு அவர்களை அருகில் உள்ள கிராமத்தில் உள்ள பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் தண்ணீர் அதிகரித்ததால் மற்ற 500 பேரை மீட்க முடியவில்லை. மீதம் உள்ளவர்கள் விமானப்படை மூலம் நாளை மீட்கப்படுவார் என தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை மீட்புப் படையினர் 8 .50 மணி அளவில் ஸ்ரீவைகுண்டத்தை அடைந்தனர். காலை 10 மணி அளவில் கர்ப்பிணி உட்பட மேலும் 4 பேரை மீட்பு குழுவினர் மீட்டனர். விமானப்படையின் மூலம் ரயில் நிலையத்தில் சிக்கி உள்ள பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டது. இருப்பினும் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. முதற்கட்டமாக 100 ரயில் பயணிகள் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களை 3 கிமீ தூரம் நடந்தே, வெள்ளூருக்கு அழைத்து வந்தனர். அங்கிருந்து பஸ்கள் மூலம் வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் இந்தப் பயணிகளை, சென்னை வரை செல்ல சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ரயில் நிலையப் பயணிகளை மீட்கும் பணிகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொளி மூலமாக கண்காணித்து ரயில்வே அதிகாரிகளை முடுக்கி விட்டார்.
மோசமான ஆட்சியில் இருந்து விடுபட தமிழ்நாடு துடிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
100 நாள் வேலைத் திட்ட பெயர் மாற்றத்திற்கு எதிராக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானம்
அதிமுக.,வுக்கு பெரும்பான்மை...என்டிஏ 210 இடங்களில் வெற்றி...எடப்பாடி பழனிச்சாமி உறுதி
சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுகின்றன: திமுகவை சூசகமாக சாடும் நயினார் நாகேந்திரன்!
மதுராந்தகத்தில் பாஜகவின் ஜல்லிக்கட்டு.. பிரதமர் மோடியின் வருகையும் 2026 தேர்தல் கணக்கும்!
அண்ணன் எடப்பாடி கே.பழனிச்சாமி...டிடிவி தினகரன் பேச்சால் ஆர்ப்பரித்த தொண்டர்கள்
NDA கூட்ட மேடையில் 'மாம்பழம்' சின்னம்: பிரதமர் மோடி முன்னிலையில் விதிமீறல் என ராமதாஸ் கடும் கண்டனம்
நாளை மக்கள் நீதி மய்யம் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம்: கமலஹாசன் அறிவிப்பு
பிரதமர் மோடியின் X தளப் பதிவை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
{{comments.comment}}