தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால், ஷூவை கழற்றி உணவக உரிமையாளரை தாக்க முயன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் காவேரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தருமரி அரசு மருத்துவமனை அருகே ஹோட்டல் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஹோட்டிலில் தருமபுரி எஸ்எஸ்ஐ காவேரி சாப்பிட சென்றுள்ளார். சாப்பிட்டு விட்டு பணம் கொடுத்துள்ளார். அப்போது பழைய பாக்கியை கேட்டுள்ளார் ஹோட்டல் உரிமையாளர் முத்தமிழ். அப்போது எஸ்எஸ்ஐக்கும், ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது திடீரென எஸ்எஸ்ஐ தான் காலில் போட்டிருந்த ஷூவை கழட்டி கடை உரிமையாளரை அடிக்க முயன்றுள்ளார். அதை அக்கம் பக்கத்தினர் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவம் ஹோட்டலில் உள்ள சிசிடி கேமிராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அறிந்த மாவட்ட கண்காணிப்பாளர் மகேஷ்வரன் தருமபுரி நகர டிஎஸ்பி தலைமையில் விசாரிக்க உத்தரவிட்டு இருந்தார்.இந்த விசாரணையில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் தான் எஸ்எஸ்ஐ காவேரி என்பதும், அடிக்கடி அவர் இந்த ஹோட்டலில் உணவு சாப்பிட்டு விட்டு முழு பணத்தையும் தராமல் பாக்கி வைத்து விட்டு சென்று வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து எஸ்ஐ மகேஸ்வரன், எஸ்எஸ்ஐ காவேரியை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாணையில் எஸ்எஸ்ஐ காவேரியின் மீது குற்றம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காவேரியை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி உத்தரவிட்டார்.
கண்ணியமிக்க காவல் துறையினர் பொதுமக்களின் நன்மதிப்பை பெற வேண்டும். பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் செயல்பட வேண்டும் என காவல் துறையினக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்எஸ். மகேஸ்வரன் அறிவுறுத்தினார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தஞ்சையில் கொடுமை.. 13 வருடமாக காதலித்த.. ஆசிரியையை தீர்த்துக் கட்டிய காதலன்!
எல்லாரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா? நானே கடுப்புல இருக்கேன்.. புது வசந்தம் (8)
செங்கோட்டையன் பற்றி பதிலளிக்க ஒன்றுமில்லை...எடப்பாடி பழனிச்சாமி பதில்
2026ல் மக்கள் புரட்சி ஏற்பட்டு விஜய் வெற்றி பெறுவார்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
தமிழகம் நோக்கி நகரும் புயல்...நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்
லோகேஷ் கனகராஜ்.. 7வது படத்தை இயக்கும் பணியில் தீவிரம்.. அது யாருடைய படம்
கே.ஏ.செங்கோட்டையனைத் தொடர்ந்து.. தவெகவுக்குப் படையெடுக்க போகும் அரசியல் தலைகள்!
இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்...ரிக்டரில் 6.6 ஆக பதிவு
சற்று குறைந்தது தங்கம் விலை... ஆபரண தங்கம் இன்று ஒரு கிராம் ரூ.11,770திற்கு விற்பனை!
{{comments.comment}}