திருச்சி: எதையெல்லாம் செய்ய முடியாதோ அதையெல்லாம் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவது தான் அவரின் வேலை. நாங்கள் சொல்வதை தான் செய்வோம் என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே பெரம்பூர் தொகுதியில் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன்பின்னர் இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் இரண்டாவது வேட்புமனுவையும் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து திருச்சி கிழக்கில் பிரச்சாரத்தை தொடங்குவதற்கு முன்பு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் திறந்த வேனில் நின்றபடியே மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே விஜய் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,
ஸ்டாலின் சாருக்கு ஏதாவது பிரச்சனை என்றால் டெல்லிக்கு பறந்து சென்று விடுவார். கேஸ் பிரச்சனையை தீர்க்க ஸ்டாலின் சார் டெல்லிக்கு போய் வலியுறுத்தலாமே? எதையெல்லாம் செய்ய முடியாதோ அதையெல்லாம் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவது தான் அவரின் வேலை. நாங்கள் சொல்வதை தான் செய்வோம். அன்னபூரணி கேஸ் திட்டம் நிறைவேற்றப்படும். ஆறு சிலிண்டரும் வழங்கப்படும். கேஸ் மானியம், பெட்ரோல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட தீர்வு காணப்படும் என்று சொன்னீர்களே, செய்தார்களா?

100 சதவீதம் நியாயமான ஆட்சியைக் கொடுப்போம். 100 சதவீதம் நீங்கள் இந்த விஜயை நம்பலாம். நீங்கள் நம்புவீர்கள் என்று தெரியும். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என உங்களிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். கரூர் சம்பவம் ஒரு சூழ்ச்சி, ஜனநாயகன் படத்தை வெளியிடாமல் இருப்பது கூட்டு சூழ்ச்சி. இந்த தேர்தலின் மிகப்பெரிய ஆயுதமாக ஜனநாயகன் திரைப்படம் மாறிவிடுமோ என சூழ்ச்சி செய்தனர் எனக்கு ஏற்பட்டுள்ள அநீதிக்கு நியாயம் கேட்கவே உங்களோடு சேர்த்து எனக்கும் நீதி கேட்டு வந்துள்ளேன்.
வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றியுள்ளார். வேலை வாங்கித் தராமல், நகராட்சித் துறையில் மட்டும் ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் என்றால் மற்ற துறையை பாருங்கள். எத்தனை வலிகள் இருந்தாலும் அத்தனை வலிகளையும் தாங்கிக் கொண்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன். வரும் 23-ம் தேதி வீட்டில் இருக்கிற அனைவரையும் ஓட்டுபோட அழைத்துச் செல்லுங்கள். வெளியூரில் இருக்கிறவர்களையும் வர வையுங்கள். அசால்டாக இருந்து விடாதீர்கள். இது ஒரு தலைமுறைக்கான தேர்தல் இது என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பெயரை பிரதமர் மாற்றுவார் என்பது அப்பட்டமான பொய்: நயினார் நாகேந்திரன்
எதையெல்லாம் செய்ய முடியாதோ அதையெல்லாம் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றிவது தான் திமுகவினரின் வேலை:விஜய்
திருச்சி கிழக்கில் விஜய்.. சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்!
விஜயகாந்த் குறித்து அவமரியாதை.. பியூஷ் கோயலின் சந்தர்ப்பவாத பேச்சு.. எல்.கே.சுதீஷ் கண்டனம்
மாலினியின் மாயாஜாலம்.. இல்லத்தரசி டூ யோகா ஆசிரியை - ஒரு தன்னம்பிக்கை பயணம்!
நீல வானமும் பூமியும்
சில உறவுகள்!
தங்கம் விலை அதிரடி சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 குறைந்தது!
தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பாம்: சென்னை வானிலை மையம் தகவல்!
{{comments.comment}}