ஓசூர்: டெல்லியைச் சேர்ந்த பிரபல ஹெல்மட் தயாரிப்பு நிறுவனமான ஸ்டீல்பேர்ட் தனது முதல் தென்னிந்திய ஆலையை, ஓசூரில் நிர்மானிக்கத் திட்டமிட்டுள்ளது.
டெல்லியிலிருந்து தயாரிக்கப்படும் இந்த நிறுவனத்தின் ஹெல்மெட்டுகள் இனி ஓசூரில் நிறுவப்படும் புதிய தொழிற்சாலையிலும் தயாரிக்கப்படும். இதற்காக ரூ. 250 கோடி மதிப்பீட்டில், புதிய ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனம் ஓசூரில் தொடங்கப்படவுள்ளது.
தென்னிந்திய மார்க்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் இந்தத் திட்டத்தில் இறங்கியுள்ளது ஸ்டீல்பேர்ட் நிறுவனம். இதுகுறித்து நிறுவனத்தின் நிர்வாக இய்குநர் ராஜீவ் கபூர் கூறுகையில், தென்னிந்தியாவில் இது முதல் ஸ்டீல்பேர்ட் தொழிற்சாலையாகும். இந்திய அளவில் இது 9வது தொழிற்சாலையாக இருக்கும். இங்கு தினசரி 20,000 ஹெல்மெட்டுகள் தயாரிக்க தொடக்க நிலையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

1964ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்டீல்பேர்ட் நிறுவனம், ஆரம்பத்தில் ஆட்டோ உதிரி பாக வர்த்தகத்தில்தான் ஈடுபட்டிருந்தது. பின்னர் ஹெல்மெட் தயாரிப்புக்கு மாறியது. இன்று ஹெல்மெட் தயாரிப்பில் முன்னணி வகிக்கிறது. இதுதவிர ரப்பர் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ், என்ஜீனியரிங் பொருட்களையும் கூட இது தயாரிக்கிறது. சிறுவர்களுக்கான பொம்மைகள், பேபி வாக்கர்ஸ், பேபி கேரியர்ஸ் உள்ளிட்டவற்றிலும் இது ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் வருவாயில் 80 சதவீதத்தை ஹெல்மெட் தயாரிப்பு வர்த்தகம்தான் ஈட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் தலா 8 தயாரிப்பு தொழிற்சாலைகளை ஸ்டீர்ல்பேர்ட் வைத்துள்ளது. இங்கிருந்துதான் இந்தியா முழுவதும் ஹெல்மெட்டுகளை அது தயாரித்து அனுப்பி வருகிறது. இதனால் பெரும் செலவு ஏற்படுகிறது. மேலும் தயாரிக்கப்பட்ட ஹெல்மெட்டுகளை இருப்பு வைப்பதற்கும் அதிக இடம் தேவைப்படுகிறது. மேலும், டெலிவரியிலும் கூட தாமதம் ஏற்படுகிறது. பத்திரமாக டெலிவரி செய்யும் ரிஸ்க்கும் இருக்கிறது. இதனால்தான் தென்னிந்தியாவில் ஒரு தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவ அது திட்டமிட்டது.
ஓசூரில் தொழிற்சாலையை நிறுவினால் தமிழ்நாடு மட்டுமல்லாமல், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களையும் எளிதில் கவர் செய்ய முடியும் என்பதால் இங்கு இந்த தொழிற்சாலையை நிறுவ அது திட்டமிட்டுள்ளது.
கரூர் சம்பவ வழக்கில் நாளை விசாரணை : ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோருக்கு தடை விதிக்க திமுக கோரிக்கை
ஜூலை 21ம் தேதி சென்னை வருகிறார் ராகுல்காந்தி: முதல்வர் விஜய்யை சந்திப்பாரா?
தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தர வேண்டும்: அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
மதிமுக.,விடம் திமுக குதிரை பேரம் நடத்தியது: வைகோ பகீர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் முன்ஜாமீன் வழக்கு வேறு நீதிபதிக்கு மாற்றம்!
ரேஸ் வேண்டாம்...நடிக்க வாங்க அஜித் - மன்சூர் அலிகான் வேண்டுகோள்
அமைச்சர் ஆனந்துடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீர் சந்திப்பு
அயோத்தி ராமர் கோயில் நன்கொடையில் தினசரி ரூ.6-8 லட்சம் திருட்டா?
சம்மன் அனுப்பிய போலீஸ்...ஆஜராகாத செந்தில் பாலாஜி...அடுத்து என்ன?
{{comments.comment}}