5 ஆண்டுகளில் செய்த திமுக செய்த சாதனைகளை கூறி ஓட்டு கேட்கின்றோம்.. பதிலடி கொடுத்த சு.வெங்கடேசன்

Mar 29, 2024,06:57 PM IST

மதுரை: 5 ஆண்டுகளில் நாங்கள் செய்த சாதனைகளை கூறி ஓட்டு கேட்கின்றோம்  என்று கூறி மதுரையில் வாக்கு சேகரித்து வருகிறார் சிட்டிங் எம்.பியும், சிபிஎம் சார்பில் மீண்டும் போட்டியிடும் வேட்பாளருமான சு. வெங்கடேசன்.


தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ள நிலயில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட வாக்கு சேகரித்து வருகின்றனர். கடும் வெயில் தற்பொழுது தமிழகத்தை வாட்டி வதைத்து வந்தாலும், வெயிலை பொருட்படுத்தாது வேட்பாளர்கள்  முக்கிய இடங்களுக்கு சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். 


மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சரவணை ஆதரித்து நேற்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில், திமுகவின் சாதனைகளை கூறி ஓட்டு கேட்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார் பழனிச்சாமி. அதிற்கு பதில் அளிக்கும் விதமாக சு.வெங்கடேன் பதிலடி கொடுத்துள்ளார். 




சு.வெங்கடேசன் தனது பிரச்சாரத்தின்போது கூறுகையில்,  நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் செய்த சாதனைகள்  170 வெற்றிகளை சொல்லி ஓட்டு கேட்கின்றோம். நாங்க உங்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம், மீண்டும் நாங்கள் செயல்பட அருவாள், சுத்தியல்,  நட்சத்திர சின்னத்தில்  வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


மகளிருக்கு ரூபாய் 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை கூறி தான் நாங்கள் மக்களிடம் ஓட்டு கேட்கிறோம். அதே போல் மதுரையின் கம்பீரமாக நிற்கும் கலைஞர் நூற்றாண்டு நூலகம், உலக தமிழர்கள் போற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகம், நான் முதல்வன் திட்டம், காலை உணவு திட்டம் என திமுக அரசின் ஒவ்வொரு சாதனை திட்டங்களையும் கம்பீரமாக கூறி தான் ஓட்டு கேட்கின்றோம் என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்