இது தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி.. சு. வெங்கடேசன் மகிழ்ச்சி!

May 06, 2023,01:29 PM IST

மதுரை: வாரணாசிக்கு மாற்றப்பட்ட கூடைப்பந்து பெண்கள் பயிற்சி மையம் மீண்டும் மயிலாடுதுறைக்கு மாற்றப்பட்டதற்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் நன்றி கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டில் உள்ள ஒரே பெண்கள் கூடைப்பந்து பயிற்சி மையத்தை மயிலாடுதுறையில் இருந்து மாற்றி மாணவிகளை வாரணாசி வரை அலைய விடுகிற வகையில் பிறப்பிக்கப்பட்டு இருந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சருக்கு  கடிதம் மூலம் நான்  11.04.2023 அன்று வலியுறுத்தி இருந்தேன்.


மயிலாடுதுறை பயிற்சி மையத்திற்கு தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இருந்து  மயிலாடுதுறைக்கே போய் பள்ளிக் கல்வியை அதிலும் குறிப்பாக மேல்நிலைக்கல்வி முதலாண்டு பயின்று வந்த மாணவிகள் எல்லாம் அதிர்ந்து போய் இருந்தனர். உபியில் உள்ள வாரணாசிக்கோ  சட்டிஷ்கரின் ராஜ்நன்த்கன் நகருக்கோ செல்லவேண்டும் என்ற உத்தரவு கண்டு திகைத்துப்போயிருந்தனர். விளையாட்டு ஆர்வமும், கல்வியும் ஒரு சேர கேள்வியாகிற நிலை ஏற்பட்டது. 


குக்கிராமத்தில் பிறந்து இந்திய பெண்கள் கூடைப்பந்து அணியின் கேப்டனாக வந்த புஷ்பா பயிற்சி பெற்ற மயிலாடுதுறை மையத்திற்கு மீண்டும் அனுமதி வழங்க வேண்டுமென்று ஒன்றிய அரசின் விளையாட்டு துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்திருந்தேன். 


இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் என்ற முறையில் தொடர்ந்து இப்பிரச்சனை குறித்து தலையீடு செய்தேன். வரும் 7 ஆம் தேதி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் மாபெரும் போராட்டம்  நடைபெற இருந்தது. நான் உள்பட இயக்கத்தோழர்கள் பலரும் அதில் பங்கெடுப்பதாக இருந்தது.  


இந்நிலையில்  மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. இந்திய விளையாட்டு ஆணையம் No 518/SAI/OPS/STC Review/ 2022 -23/ 03.05.2022 அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை பெண்கள் கூடைப்பந்து பயிற்சி மையம் மீட்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த 11 பயிற்சி இடங்களும் ஒன்று கூட குறையாமல் தரப்பட்டுள்ளது. எனது கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

எனது கடிதத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்த ஒன்றிய அமைச்சருக்கு நன்றி.


போராடிப்பெற்ற இந்த வெற்றியை தமிழ்நாட்டின் கூடைப்பந்து வீராங்கனைகளுக்கு  அர்ப்பணிப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்