மதுரையில் மீண்டும் சு. வெங்கடேசன் போட்டி.. திண்டுக்கல் சிபிஎம் வேட்பாளர் ஆர். சச்சிதானந்தம்!

Mar 15, 2024,07:52 PM IST

சென்னை: மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மீண்டும் சு. வெங்கடேசன் எம்.பியே போட்டியிடுகிறார். திண்டுக்கல் தொகுதி வேட்பாளராக ஆர். சச்சிதானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார்.


திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த முறை இக்கட்சி மதுரை, கோவையில் போட்டியிட்டு வென்றிருந்தது. இந்த முறை மதுரை, திண்டுக்கல் கிடைத்துள்ளது.


இந்தத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் கூட்டம் இன்று சென்னை தி.நகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேட்பாளர்களை அறிவித்தார்.




அதன்படி மதுரையில் சு. வெங்கடேசனையும், திண்டுக்கலில் மாவட்டச் செயலாளராக உள்ளவரும், கடந்த 35 வருடமாக முழு நேர அரசியல் பணியில் ஈடுபட்டுள்ளவருமான ஆர். சச்சிதானந்தம் போட்டியிடுவார்கள் என்று அவர் அறிவித்தார். இருவரும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர் என்றும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


தமிழ்நாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட முதல் கட்சி வேட்பாளர்கள் சிபிஎம் வேட்பாளர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


திண்டுக்கல்லில் கொடி நாட்டுவாரா சச்சிதானந்தன்?




மதுரை வேட்பாளராக மீண்டும் களம் காணும் சு. வெங்கடேசனுக்கு அறிமுகமே தேவையில்லை. அவரைப் பற்றி தமிழ்நாட்டுக்கே சிறப்பாக தெரியும். தற்போது அனைவரின் கவனமும் திண்டுக்கல் மீதுதான் படிந்துள்ளது.


திண்டுக்கல்லைப் பொறுத்தவரை அது கம்யூனிஸ்ட் கட்சிக்கு புதிதல்ல.. பழகிய கோட்டைதான்.. வென்ற தொகுதியும் கூட. திண்டுக்கல்லின் கம்யூனிஸ்ட் அடையாளமாக திகழ்பவர் பாலபாரதி. ஆனால் தற்போது மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தனுக்கு சீட் கிடைத்துள்ளது.


கடந்த லோக்சபா தேர்தலில் இந்தத் தொகுதியில் திமுக போட்டியிட்டு வென்றது. அத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டவர் வேலுச்சாமி. எதிர்த்துப் போட்டியிட்டது பாமக. அதிமுக - பாஜக கூட்டணியில் தொகுதிக்குச் சம்பந்தமே இல்லாமல் பாகமவுக்கு ஒதுக்கி விட்டதால் திக்குமுக்காடிப் போய் விட்டார் பாமக வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. மிக மிக எளிதான  வெற்றியை இங்கு பதிவு செய்திருந்தார் வேலுச்சாமி.


திண்டுக்கல் சட்டசபைத் தொகுதி உறுப்பினராக பாலபாரதி மூன்று  முறை இருந்துள்ளார். கடந்த 2 சட்டசபைத் தேர்தல்களாக இங்கு சிபிஎம்முக்கு வெல்லும் வாய்ப்பு கிட்டவில்லை. இப்போதுதான் எம்.பி. சீட் கிடைக்கும் வாய்ப்பு கூடி வந்துள்ளது. இதனால் மார்க்சிஸ்ட் தோழர்கள் குஷியாகியுள்ளனர்.


திமுக போட்டியிடாததால் அதிமுக தரப்பு ஹேப்பியாகியுள்ளதாம். அதேசமயம், நாம் போட்டியிட்டால் எப்படி வேலை பார்ப்பீர்களோ அதை விட ஒரு பங்கு அதிகமாகவே சிபிஎம் வெற்றிக்காக பாடுபட வேண்டும், அதில் மெ்த்தனம் கூடாது என்று அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவே பிறப்பித்துள்ளாராம். இதனால் நிச்சயம் சச்சிதானந்தம் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் உள்ளனர்.


சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்