சென்னை: சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் காலையிலேயே செமையான ஒரு மழை பெய்து மக்களைக் குளிர வைத்து விட்டது. இந்த மழை இன்று முழுக்க அவ்வப்போது தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வட கிழக்குப் பருவ மழை வரப் போகிறது. நாள் நெருங்கி விட்டது. 16ம் தேதிக்கு மேல் மழை தொடங்கலாம் என்று வானிலை மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த நிலையில் தற்போதே அதற்கான சூழலை சென்னை சந்திக்க ஆரம்பித்து விட்டது. சில நாட்களாகவே அவ்வப்போது சின்ன சின்னதாக மழை பெய்து வந்தது. கூடவே வெயிலும் இருந்தது.
இந்த நிலையில் இன்று காலை டோட்டலாக சூழல் மாறியது. காலையில் சரியான மழை ஒன்று பெய்து தீர்த்தது. குறிப்பாக புறநகர்களில் சூப்பராக மழை பெய்தது. திடீர் கன மழையால் மக்கள் ஹேப்பியாகி விட்டனர். இந்த மழை இன்று முழுவதும் அவ்வப்போது இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மேலும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரையிலான காலகட்டத்தில் கன மழையாக இது அதிகரிக்கும் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார். ஆக, இந்த வட கிழக்குப் பருவ மழைக்காலம் சரியான அதிரடியுடன் தொடங்கும் என்று எதிர்பார்ப்போம்.
அதேபோல தூத்துக்குடி முதல் சென்னை வரியைலான கடலோர மாவட்ட மக்கள் இன்று முதல் வெளியில் செல்லும்போது குடையுடன் போங்க என்றும் வெதர்மேன் அட்வைஸ் கொடுத்துள்ளார்... வாங்க மக்களே இன்னும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. சந்தோஷமாக அனுபவிப்போம்.. கூடவே ஜாக்கிரதையாகவும் இருந்து கொள்வோம்.
முதல்வர் நிதீஷ் குமார் வீட்டின் முன் போராட்டம்.. சீட் கிடைக்காததால் ஜேடியு எம்.எல்.ஏ தர்ணா
பீகார் சட்டசபைத் தேர்தல்.. இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடரும் இழுபறி
தென்னகத்து காசி.. காலபைரவர் கோவில்.. ஈரோடு போனா மறக்காம போய்ட்டு வாங்க!
சமுதாயமும் ஆன்மீகமும் (The Society and Spirituality)
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 14, 2025...இன்று சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ராசிகள்
41 குடும்பங்களுக்கும் மாதம் ரூ. 5000.. தவெக சார்பில் ஜேப்பியார் கல்லூரி தலைவர் வழங்குகிறார்!
மழையே மழையே.. மறுபடியும் ஒரு மழைக்காலம் வந்தாச்சு.. காலையிலே சூப்பராக நனைந்த சென்னை
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
{{comments.comment}}