மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!

Mar 08, 2026,02:46 PM IST

- மயிலாடுதுறை த.சுகந்தி,M.Sc,B.Ed,B.A(Hindi)


மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா.......


பொறுமைக்கும்,திறமைக்கும்  எடுத்துக்காட்டாக இருக்கும் பெண்களை சிறப்பாக போற்ற ஒவ்வொரு ஆண்களும் கொண்டாட வேண்டிய தினம்.


என்ன தினம் என்று அனைவரும் அறிந்த தினம் தான்.  International Women's Day (மகளிர் தினம்)


மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 அன்று கொண்டாடப்படுகிறது. பெண்களின் உரிமைகள் மற்றும் சாதனைகளை போற்றும் தினமாக கொண்டாடப்படுகிறது. பெண்களின் சமத்துவத்தை உலகம் முழுவதும் நினைவூட்டி,அவர்களின் சிறப்புகளை போற்றி கொண்டாடப்படுகிறது.


பெண்களின் கல்வி, வேலை மற்றும் சமூக உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.  பெண்களின் திறமை மற்றும் உழைப்பை மதிக்கும் தினமாக கொண்டாடப்படுகிறது.




குடும்பத்திலும் சமுதாயத்திலும் பெண்களின் பங்களிப்பு  மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. பெண்களுக்கு மரியாதை மற்றும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்பதை எடுத்து கூறுகிறது .


பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. பல நாடுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் மகளிருக்கு பல போட்டிகள் வைத்து அவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறார்கள்.

 

பெண்கள் செய்த  சாதனைகளை போற்றுவதோடு,அவர்களைப் போல் ஒவ்வொரு பெண்ணும் வாழ வேண்டும் என ஊக்கப்படுத்தப்படுகிறது. பெண்கள் சமூக முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறார்கள். பெண்கள் கல்வி பெற்றால் தான் நாடு முன்னேறும் என்பதை உணர்த்துகிறது.


பெண்களின் தைரியம் மற்றும் திறமையை பாராட்டும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது . பெண்களுக்கு சம வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. பெண்கள் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள். பெண்களின் சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை வளர்க்கும் தினமாக கொண்டாடப்படுகிறது.


பெண்களை மதித்து அவர்களுக்கு சம உரிமை வழங்குவோம் என ஒவ்வொரு ஆணும் செயல்பட்டால் தான் அது மகளிர்க்கு கிடைத்த வெற்றியாகும். மகளிர் தினத்தை மகளிர்களால் சிறப்பாக கொண்டாடுவதாக இல்லாமல் ஆண்கள் மகளிர்களை போற்றும் விதமாக இருந்தால் தான் சிறப்பாக இருக்கும்.


இனிவரும் காலங்களில் நமது ஆண் குழந்தைகளுகளிடம் மகளிர்களை போற்ற சொல்லிக் கொடுப்போம். இல்லத்தரசிகளாக இருந்தாலும்,வேலைக்கு செல்லும் பெண்களாக இருந்தாலும் தனக்கு பிடித்ததை செய்வதற்கு உரிமை இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்வோம் .


தனக்குப் பிடித்த செயல்களை நாம் உரிமையாக செய்வோம்.அடுத்தவர்கள் என்ன சொல்வார்கள் என்று எண்ண வேண்டாம் . இன்றைய நாளில் இருந்து நாம் சரித்திரம் படைப்போம் என்று வாழ்ந்து காட்டுவோம். ஒவ்வொரு மகளிரும் தனது தனித்திறமையை வெளிக்காட்டுவோம் என உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்.


(த.சுகந்தி, மயிலாடுதுறையைச் சேரந்தவர். அருள் தமிழ் இலக்கியம்,மயிலாடுதுறை அமைப்பை நடத்தி வருகிறார். ஆத்திச்சூடி 109, நாலடியார், திருக்குறள்  போன்ற தொகுப்பு நூல்களில் சிறுகதை ஒன்று எழுதி உள்ளார். பாரதியார் நவீன ஆத்திச்சூடி எழுதி மகாகவி பாரதி விருது பெற்றுள்ளார். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தோல்விகள் பாடங்களைக் கற்பிக்கலாம்,.. ஆனால் வெற்றிகள் மட்டுமே வரலாற்றை எழுதும்!

news

India T20 World Cup Champion: அகமதாபாத்தில் புதிய வரலாறு.. 3வது டி 20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா

news

T20 Cricket World Cup Finals: அகமதாபாத்தை அதிர விட்ட இந்தியா.. அடுத்தடுத்து பல உலக சாதனைகள் காலி!

news

இந்திய பேட்டிங் வேகத்தை சீர்குலைத்த ஜிம்மி நீஷம்.. சுத்த மோசம்.. ஒரே ஓவரில் 3 விக்கெட்கள்!

news

ஹாட்ரிக் அரை சதம்.. நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வித்தை காட்டிய சஞ்சு சாம்சன்!

news

பேச வேண்டிய நேரத்தில் பேட் பேசும்.. சுனில் கவாஸ்கரின் வாயை.. அதிரடியாக மூடிய அபிஷேக் சர்மா!

news

அபிஷேக் - சஞ்சு சாம்சன் அதிரிபுதிரி ஆட்டம்.. பாகிஸ்தான் உலக சாதனையை முறியடித்த இந்தியா!

news

வலிகள் பல தாங்கி வாழ்க்கை பயணத்தில்.... !

news

அரை சதம் போட்ட கையோடு அவுட்டானார் இஷான் கிஷன்.. இந்தியாவுக்கு 300 ரன்கள் வருமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்