Summer பரிதாபங்கள்.. "டேய் யார்டா நீ.. என்னைப் போய் அப்பான்னு கூப்பிடுறே"

May 03, 2023,04:30 PM IST
சென்னை: தமிழ்நாடு முழுக்க வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. ஆங்காங்கே கோடை மழை பெய்தாலும் கூட வெயிலின் புழுக்கம் முழுக்க குறையவில்லை. தொடர்ந்து வெயில் வறுத்தெடுக்கிறது.

வெயில் வந்தால் கூடவே குளுகுளுன்னு வெயில் ஜோக்ஸும் வந்தாகணும் என்பது ஐதீகம்.. அந்த அடிப்படையில் இன்டர்நெட்டில் வலை வீசி தேடியபோது அகப்பட்ட சில ஜோக்குகள் உங்களுக்காக.



"அப்பா"
"யார்டா  நீ என்னை அப்பான்னு கூப்பிட்றே"
"நான்தான்பா உங்க மகன்.. காலைல கிரிக்கெட் விளையாடப் போயிருந்தேனே"
"அடப்பாவி நீயா.. இப்படி கரிக்கட்டி மாதிரி வந்து நிக்கிறியேடா"

--

டாக்டர் - என்னாச்சு இவருக்கு.. ஏன் உக்கார முடியாம நிக்கிறாரு
நர்ஸ் - மத்தியானம் ஒரு மணிக்கு டூவீலர்ல ஏறி உக்காந்திருக்காரு டாக்டர்.. பொசுங்கிருச்சு!



--

"நாமெல்லாம் இப்ப பூமியிலதானடா இருக்கோம்"
"ஆமா.. அதுல என்ன சந்தேகம்"
"எனக்கென்னமோ.. சூரியனுக்குள்ள போய் உட்கார்ந்திருக்கிறோமோன்னு ஒரு பீலிங்கு"

--

வெயில் - நான்தான் வருஷா வருஷம் 30 நாள் ஸ்கூலுக்கெல்லாம் லீவு கொடுக்கிறேன்

மழை.. நானும்தான் சென்னைக்கெல்லாம் வருஷா வருஷம் சர்ப்பிரைஸ் லீவு கொடுப்பேன்.

கொரோனா - என்னம்மா அங்க சத்தம்!!!

சமீபத்திய செய்திகள்

news

விஜய் பையில் கத்திரிக்கோல்.. ஆதவ் அர்ஜூனாவிடம் மது பாட்டில்.. பரபரத்த சென்னை ஏர்போர்ட்!

news

எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிப்பு...தமிழகத்தில் வேகமெடுக்கும் அரசு பணிகள்

news

Iran-Israel War: மேற்கு ஆசியப் போர் எதிரொலி - சமையல் எண்ணெய் விலை அதிரடி உயர்வு

news

10 ஏவுகணைகளை ஏவி அதிரடி காட்டிய கிம்மின் வடகொரியா.. கிலியில் அண்டை நாடுகள்!

news

வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு: உணவகங்களுக்கு மின்சார மானியம் அறிவிப்பு

news

மதுரை விமான நிலையம்.. திருத்தம்.. மதுரை சர்வதேச விமான நிலையம்.. மத்திய அரசு ஆணை!

news

மகேந்திரகிரியில் கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி : இஸ்ரோ அறிவிப்பு

news

NDA கூட்டணியில் தவெக விஜய்?.. நயினார் நாகேந்திரன் அளித்த அதிரடி விளக்கம்

news

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி - பிடிவாதம் காட்டும் இடதுசாரிகள்.. தேமுதிகவுக்கு அதிகம் தர எதிர்ப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்