சென்னை: தலைவர் 173 பட வாய்ப்பை விட்டுவிட்டாலும், ரஜினி - கமலின் வழிகாட்டுதலை நான் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வேன். விரைவில் உங்களை மகிழ்விக்கும் புதிய படைப்புகளுடன் வருவேன் என்று சுந்தர் சி தெரிவித்துள்ளார்.
கமல் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 173வது திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியிருந்தது. இதனையடுத்து ரஜினி நடிக்கும் படத்திற்கான வேலைகளை சுந்தர் சி செய்துவருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படத்தில் இருந்து சுந்தர் சி விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து சுந்தர் சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், கனத்த இதயத்துடன் சில முக்கியமான செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், ரஜினிகாந்தின் தலைவர்173வது படத்தில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். நீண்ட காலம் கழித்து நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. நம் வாழ்க்கையில், நமது கனவுகளில் இருந்து சில நேரம் நாம் விலகிச் சென்றாலும், நமக்காக வகுக்கப்பட்ட பாதையைப் பின்பற்ற வேண்டிய தருணங்கள் உள்ளன.

இந்த இரண்டு பெரிய ஜாம்பவான்களுடனான எனது தொடர்பு நீண்ட காலமாக நீடித்து வருகிறது. இந்த மிகப்பெரிய வாய்ப்பை அவர்கள் எனக்கு வழங்கியதற்காக நன்றியைத் தெரிவிக்கிறேன். தலை்வர் 173 பட வாய்ப்பை விட்டுவிட்டாலும், ரஜினி - கமலின் வழிகாட்டுதலை நான் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்வேன். இவ்வளவு பெரிய வாய்ப்பை எனக்கு கொடுக்க நினைத்ததற்காக இருவருக்கும் நன்றி. இந்த செய்தி ரசிகர்களை ஏமாற்றியிருக்கலாம், அதற்காக மன்னிக்கவும். ஆனால், விரைவில் உங்களை மகிழ்விக்கும் புதிய படைப்புகளுடன் வருவேன் என்று தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு
கூட்டணிக்கு யாரும் வரல...தேர்தல் திட்டம் இதுவா...என்ன செய்ய போகிறார் விஜய்?
இன்று மாலை வீட்டில் விளக்கேற்றுங்க...நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
ஜனநாயகன் படத்தை 10ம் தேதி ஏன் தள்ளி வைக்கக் கூடாது.. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி
காணாமல் போன வைர மாலை (ஒரு பக்க சிறுகதை)
தமிழகத்தில் வச்சு செய்யப்போகும் கனமழை... எப்போ, எங்கெல்லாம் என்று தெரியுமா?
திமுக இனியாவது நீதிமன்ற தீர்ப்பினை மதிக்க வேண்டும்: அண்ணாலை
பொம்மையம்மா.. பொம்மை!
நான் அப்படியே ஸ்வீட் ஷாக் ஆயிட்டேன்.. I got stunned!
{{comments.comment}}