ராஞ்சி: இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் விளையாடும் விதத்தைப் பார்த்து அடுத்த தோனி ரெடியாகிறார் என்று கூறியுள்ளார் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்.
இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. "தல" தோனியின் சொந்த ஊரில்தான் இப்படி சூப்பராக செயல்பட்டு, அடுத்த தோனி என்று கவாஸ்கரால் பாராட்டப்பட்டுள்ளார் துருவ் ஜூரல். முதல் இன்னிங்ஸில் சூப்பராக விளையாடிய ஜூரல் 90 ரன்களைக் குவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி விட்டார்.
நேற்று 30 ரன்களுடன் களத்தில் இருந்த ஜூரல் இன்று தொடர்ந்து சிறப்பாக விளையாடி 90 ரன்களைக் குவித்து அசத்தினார். முதல் சதத்தை நோக்கி அம்சமாக நடை போட்டுக் கொண்டிருந்த ஜூரலை, டாம் ஹார்ட்லியின் பந்து கிளீன் போல்டாக்கி கனவை தகர்த்து விட்டது. இது ஜூரலுக்கு 2வது டெஸ்ட் போட்டியாகும்.
ஜூரலின் சிறப்பான ஆட்டம் குறித்து புகழ்ந்துள்ளார் கவாஸ்கர். அவர் கூறுகையில் அருமையான presence of mind ஜூரலிடம் உள்ளது. தோனி போலவே விளையாடுகிறார். இவர்தான் அடுத்த தோனியாக வருவார் என்று எனது உள் மனசு சொல்கிறது. இதேபோல ஜூரல் தொடர்ந்து விளையாடினால், நிச்சயம் பல செஞ்சுரிகளை அவர் எடுக்க முடியும்.
இன்று அவர் சதத்தை மிஸ் செய்திருக்கலாம். ஆனால் அவர் அடுத்தடுத்து பல சதங்களைப் போடுவார்.. அந்தத் திறமை அவரிடம் உள்ளது என்றார் கவாஸ்கர்.
8வது விக்கெட்டுக்கு ஜூரலும், குல்தீப் யாதவும் இணைந்து 76 ரன்களைச் சேர்த்துக் கொடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் சோயப் பாசிர் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்களைச் சாய்த்தார்.
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
{{comments.comment}}