"உலக நாயகன்".. கமல்ஹாசனின் "இந்தியன் 2 அறிமுகம்".. "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த் வெளியிட்டார் !

Nov 03, 2023,05:49 PM IST

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 அறிமுகம் டீசர் வீடியோவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.


இயக்குநர் ஷங்கரின் முத்திரைப் படங்களில் முக்கியமானது இந்தியன். கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா, ஊர்மிளாமடோன்கர், நெடுமுடி வேணு, கவுண்டமணி, செந்தில்  உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி மாஸ் வெற்றி பெற்ற பிரமாண்டப் படம்.


ஊழல் மகனாகவும், சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் - ஊழலுக்கு எதிராக களையெடுக்கும் இந்தியன் தாத்தாவாகவும் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். படம் அப்போது நாடு முழுவதும் பேசப்பட்டது. 




இப்போது இந்தியன் படத்தின் 2வது பாகத்தை ஷங்கர் எடுத்துள்ளார். இதில் கமல்ஹாசன் மீண்டும் இந்தியன் தாத்தா வேடத்தில் வருகிறார். இந்தப் படத்தின் அறிமுகக் காட்சியை இன்று ஒரே நேரத்தில் பன்மொழிக் கலைஞர்கள் வெளியிட்டனர்.


தமிழ் அறிமுகக் காட்சியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அதேபோல மோகன்லால், அமீர் கான் உள்ளிட்ட பிற திரைப்படக் கலைஞர்கள் அறிமுகக் காட்சியை அந்தந்த மொழிகளில் வெளியிட்டுள்ளனர். 




முதல் பாகத்தைப் போலவே இதிலும் ஊழலுக்கு எதிரான கதையையே களமாக்கியுள்ளார் ஷங்கர் என்று தெரிகிறது. கூடவே கொரோனா சமயத்தில் தட்டுக்களை எடுத்து தெருக்களில், வீடுகளில், வீட்டு மாடிகளில் தட்டிய காட்சிகளும் கூட இடம் பெற்றுள்ளது.


கம் பேக் இந்தியன் என்ற பாடலுடன் கூடிய இந்த அறிமுகக் காட்சி படம் குறித்த மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைசியில் இந்தின் இஸ் பேக் என்று கூறும் கமல்ஹாசன் மீண்டும் தாத்தா வேடத்தில் காட்சி தந்து அசத்தியுள்ளார்.


டீசர் பட்டையைக் கிளப்பும் வகையில் உள்ளது.. படம் எப்படி இருக்குமோ.. பொறுத்திருந்து பார்க்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக முன்வர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

news

இலந்தை பழப் பாட்டி (குட்டிக் கதை)

news

தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை... இன்றைக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

news

நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும்: நயினார் நாகேந்திரன்

news

அண்ணன் எங்க அண்ணன்.. கல்வி மாபெரும் ஆயதம்.. அதுவே உயர்த்தும்.. இது ஒரு உண்மைக் கதை!

news

பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி.. முருகப்பெருமானுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?

news

இந்த பிரபஞ்சம் நீயே (You are the Universe )

news

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால்.. எங்களை அழையுங்கள்.. உதவி எண்களை அறிவித்தார் சீமான்

news

ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்: வானிலை மையம்

அதிகம் பார்க்கும் செய்திகள்