சென்னை: உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த் கண்விழித்ததும், தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டார். வேட்டையன் படத்தை முடித்து விட்ட ரஜினிகாந்த், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு விட்டுத் திரும்பிய ரஜினிகாந்த்துக்கு அடிவயிற்றில் வலி ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள மருத்துவரை தொடர்கொண்டு பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நள்ளிரவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினிகாந்த். இன்று காலையில், 3 விதமான பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும், முதலில் அடிவயிற்றில் ஏற்பட்ட வலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அறுவை சிக்சை எதும் செய்யப்படவில்லை என்றும், ஆஞ்சியோ மட்டும் செய்யப்பட்டதாகவும், அப்போது அரைமணி நேரம் மயக்க நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இருந்ததாக தெரிகிறது.
அதன்பின்னர் கண் விழித்த ரஜினிகாந்த் மருத்துவர்களிடம் சிரித்து பேசியதாகவும், தனக்கு சிகிச்சையளித்த டாக்டருக்கு நன்றி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து குடும்பத்தாருடன் பேசியதாகவும் கூறப்படுகிறது. இன்று இரவு அல்லது நாளை காலை ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு செல்ல உள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நலமுடன் இருக்கும் தகவல்கள் இணையத்தில் வைராகி வரும் நிலையில், ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பான ஓடிபி கேட்டு போன் வந்தால்.. உஷாரா இருங்க மக்களே!
நாளெல்லாம் ஹரிநாமம்.. மனமெல்லாம் மாதவஹரி.. நாவெல்லாம் கேசவஹரி!
புதுச்சேரியில் நாளை நடக்கவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பயணம் ரத்து
மாம்பழம் சின்னம் முடக்கப்படும்...பாமக வழக்கில் தேர்தல் கமிஷன் பதில்
பாஞ்சராத்திர தீபத்தின் முக்கியத்துவம் என்ன.. அதை ஏற்றுவது ஏன்?
தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ.320 குறைவு
செல்லமாக வளர்ப்பது தவறில்லை.. செல்லாத செல்வங்களாய் வளர்க்கலாமோ!?
திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
ஓபிஎஸ் டெல்லி விசிட்...பாஜக., தலைவர்களுடன் சந்திப்பு...டெல்லியில் என்ன நடக்கிறது?
{{comments.comment}}