டெல்லி: தேர்தல் பாண்டுகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிட வேண்டும். அனைத்து விவரம் என்றால் ஒரு விவரத்தையும் நீங்கள் மறைக்கக் கூடாது. மறைக்கக் கூடியது என்று நீங்கள் கருதும் அனைத்தையும் வெளியிட வேண்டும். செவ்வாய்க்கிழமைக்குள் இதைச் செய்ய வேண்டும் என்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு இன்று உச்சநீதிமன்றம் கடுமையான உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.
எல்லாவற்றையும் தாக்கல் செய்த பிறகு நாங்கள் ஒரு விவரத்தையும் மறைக்கவில்லை, எல்லாவற்றையும் வெளியிட்டு விட்டோம் என்ற பிரமாணப் பத்திரத்தையும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் தலைவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு உத்தரவில் தெரிவித்துள்ளது.

தேர்தல் பாண்டுகள் தொடர்பான வழக்கில் பாண்டுகளின் எண்கள் உள்ளிட்ட சில விவரங்களை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வெளியிடவில்லை. இது கடும் கண்டனத்தை எழுப்பியது. சுப்ரீம் கோர்ட்டும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தேர்தல் பாண்டுகள் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் செயலில் நேர்மை இல்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
தேர்தல் பாண்டுகளின் எண்களை ஏன் இன்னும் தாக்கல் செய்யவில்லை என்று தலைமை நீதிபதி கடுமையாக கேள்வி எழுப்பினார். இதையடுத்து வங்கியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, தேர்தல் பாண்டுகளின் எண்களை வெளியிடுவோம் என்று ஒப்புக் கொண்டார். இதையடுத்து தேர்தல் பாண்டுகள் குறித்த அனைத்து விவரங்களையும் செவ்வாய்க்கிழமைக்குள் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எதையும் மறைக்கவில்லை எல்லாவற்றையும் வெளிப்படுத்தி விட்டோம் என்ற பிரமாணப் பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி விவரத்தை வெளியிட்டதும் அதை தேர்தல் ஆணையம் தனது தளத்தி் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ஸ்டேட் வங்கியிடம் உள்ள தேர்தல் பாண்டுகள் குறித்த ஒரு விவரத்தையும் மறைக்கக் கூடாது. எல்லாவற்றையும் வெளியிட வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}