டில்லி: மதுபான கொள்கை வழக்கில் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வருகின்ற 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
புதிய மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. விசாரணைக்கு ஆஜராகாத கெஜ்ரிவால், டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடி வந்தார். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் கைவிட்ட நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க துறையால், அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை எதிர்த்தும், உடனடியாக தன்னை விடுவிக்க கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்வர்ணகாந்த் சர்மா, மதுபான கொள்கை விவகாரத்தில் கெஜ்ரிவாலின் பங்கு இருப்பது, அமலாக்கத்துறை ஆதாரங்களில் இருந்து தெரிய வருகிறது. டெல்லி மதுபான கொள்கை உருவாக்கத்தில் மனுதாரர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றி உள்ளார் என்று கூறி டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டை சந்தித்து இந்த வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுக்க கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர். கடந்த 3ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தற்போது தேர்தல் நடைபெறும் சூழல் என்பதால் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை, இடைக்கால நிவாரணம் வழங்கினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் எனக் கூறியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர். அதன்படி இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்க கூடாது என அமலாக்கத்துறை சார்பில் கோரிக்க வைக்கப்பட்டது. கெஜ்ரிவால் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இன்று இடம் பெற்றன. அதைத் தொடர்ந்து விசாரணை நாளை மறுநாள் 9ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்தி வைத்தது.
இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் உள்ளன.. அதில் 12 களத்தில் உள்ளன.. சிப்ரி அறிக்கை
வாழை வாழவைக்கும்.. அப்படின்னா என்ன.. ஏன் அப்படி சொல்றோம் தெரியுமா?
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்.. சுந்தரமூர்த்தி நாயனார்
Water tank Cleaning: வீட்டுத் தண்ணீர்த் தொட்டியை எப்பெல்லாம் சுத்தம் செய்யணும் தெரியுமா?
அழகு மயில்!
என்ன ரதி .. இதுக்கு அப்புறமும்....ம் ..தானா..... அவளின் (ல்) அவன்! (19)
மதியொளி முகமோ!
குடும்பத்தை ஏமாற்ற 12 வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையாக நடித்த 37 வயது பெண்!
இனி கூட்டணியே தேவையில்லை.. திமுக தனித்துப் போட்டியிட வேண்டும்.. தொண்டர்கள் வலியுறுத்தல்
{{comments.comment}}