டெல்லி: பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவரை பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
சிறப்பு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் கோர்ட் அனுமதி இல்லாமல் யாரையும் கைது செய்யக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்:
சிறப்பு நீதிமன்றத்தில் பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் மீது குற்றச்சாட்டு பதிவாகி விட்டால், அவரை கோர்ட் அனுமதி இல்லாமல் அமலாக்கத்துறை விசாரிக்க முடியாது. அவரைக் கைது செய்யவும் முடியாது.
கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்த விரும்பினால், முறைப்படி சம்பந்தப்பட்ட சிறப்பு கோர்ட்டை அணுகி அனுமதி பெற வேண்டும். அனுமதி அளிப்பதும், அளிக்காமல் இருப்பதும் சிறப்பு கோர்ட்டின் முடிவைப் பொறுத்தது. சரியான காரணங்கள் இருந்தால் சிறப்பு கோர்ட், விசாரணைக்கு அனுமதி அளிக்கும். அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஒருவரை அனுப்ப வேண்டுமா வேண்டாமா என்பதையும் சிறப்பு நீதிமன்றமே முடிவு செய்யும்.
உச்சநீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்கை விசாரித்தபோது இந்த கட்டுப்பாடுகளை உச்சநீதிமன்றம் அறிவித்தது.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}