-ஸ்வர்ணலட்சுமி
சென்னை: வெளியில் ஜிலுஜிலுன்னு மழை வெளுத்து வாங்குது. கூடவே குளிரும் சுண்டி இழுக்குது. இப்படிப்படட் கிளைமேட்டில் சளி, தலைவலி, காய்ச்சல் போன்றவை வருவது இயல்பு. இதிலிருந்து தப்பிக்கவும், குளிரைத் தாங்கவும், உடம்பு ஆரோக்கியத்திற்காகவும் உள்ள ஒரு அருமையான பானம் எது தெரியுமா.. அட வெஜிட்டபிள் சூப் தாங்க.
ஹெல்த்தியானது மட்டுமல்ல, டேஸ்ட்டியானதும் கூட. செஞ்சு குடிச்சுப் பாருங்க, மழையை ஜாலியா என்ஜாய் பண்ணுங்க.
வெஜிடபிள் சூப் செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
(வீட்டில் இருக்கும் காய்கறி போதும்)
கேரட் -1
பீன்ஸ் - 6 (கட் செய்து கொள்ளவும்)
தக்காளி 1 கட் செய்யவும் அல்லது அப்படியேவும் போடலாம்
சீரகம்- ஒரு ஸ்பூன்
மிளகு - ஒரு ஸ்பூன்
இஞ்சி - கட் செய்தது
கான்பிளவர் - மஞ்சள் நிறம் 2 ஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லித்தழை கட் செய்தது சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப (இந்துப்பு சேர்க்கவும்)
பிரெஷ் பச்சை பட்டாணி - அரை கப்
செய்முறை
1. ஒரு பாத்திரத்தில் நாலு கப் தண்ணீர் ஊற்றி சீரகம் + மிளகு + தக்காளி + இஞ்சி + மஞ்சள் தூள் போட்டு நன்றாக கொதிக்க விடவும். மூன்று கப் ஆகும் வரை கொதிக்கவும்.
2. வேறு ஒரு பாத்திரத்தில் கேரட் பீன்ஸ் பச்சை பட்டாணி தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
3. சீரகம், மிளகு எசன்ஸ் நன்றாக தண்ணீரில் இறங்கி விடும். அதனை டீ வடிகட்டியால் வடிகட்டி விடவும்.
4. வெஜிடபிள் வெந்ததும் இந்த தண்ணீரை ஊற்றவும்.
5. கான்பிளவர் மாவை ஒரு கப்பில் சிறிதளவு தண்ணீர் கரைத்து ஊற்றவும். சூப் இப்போது சிறிதளவு கெட்டியாகும். உடனே அடுப்பை அணைத்து விட வேண்டும். கறிவேப்பிலை மல்லித்தழை போட்டு சர்விங் பவுலுக்கு மாற்றவும் உப்பு மிளகு தூள் சேர்த்துக் கொள்ளவும்
காய்கறிகளை பொரியல் வறுவல் கூட்டு என்று வைத்து சாப்பிடுவதைவிட சூப் செய்து சாப்பிடுவதால் சத்து முழுமையாக கிடைப்பதுடன், சுவை மிக்கதாகவும் இருக்கும். மழைக்கு இதமான சூப் கமகம வெஜிடபிள் சூப் ரெடி.
சூப் உணவுகள் இன்றோ நேற்றோ வந்தது கிடையாது. அது பல பல தசாப்தங்களாக பின்பற்றி வருகிறோம்.
நன்மைகள்
1. ஊட்டச்சத்துக்கள் இதில் அடர்த்தியாக உள்ளன. முக்கியமாக கலோரிகள் குறைவு
2. கலோரி குறைந்த டயட் என்பதால் வெயிட்லாஸ் உடல் எடை குறைவதுடன் செரிமான மண்டலம் வலுப்பெறுகிறது
3. சளி மற்றும் இருமல் சுவாசம் போன்ற நோய் தொற்றுகளுக்கு சூப் அருந்துவது சிறந்தது
4. சைனஸிலிருந்து காக்கவும் செய்கின்றது
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
IMD alert: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு.. அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழக்கும்.. அதி கன மழைக்கு வாய்ப்பு
திருவண்ணாமலை.. தீப மலையின் உச்சியை அடைந்தது தீபம் ஏற்றும் ராட்சத கொப்பரை!
3 மாவட்டங்களில் இன்று அதிகன மழைக்கான ரெட் அலர்ட்.. நாளை தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!
Yearender 2024: அஜீத்தால் பிரபலமடைந்த அஜர்பைஜான்.. அதிகம் கூகுள் செய்யப்பட்ட நாடு இதுதான்!
Yearender 2024: நாக்கில் வச்சதும்.. நச்சுன்னு சுவைக்கும் மாங்காய் ஊறுகாய்க்கு.. தேடுதலில் 2வது இடம்!
கார்த்திகை தீபத் திருநாள் ஸ்பெஷல் நைவேத்தியம்...கார்த்திகை பொரி பற்றி இதெல்லாம் தெரியுமா?
ஆங்கில புத்தாண்டு 2025 ராசிபலன் : மேஷம் ராசி வாசகர்களே.. இந்த வருஷம் உங்க வருஷம்.. ஜமாய்ங்க!
திருக்கார்த்திகை தீபத் திருநாள் 2024: எந்த நேரத்தில், எப்படி விளக்கேற்ற வேண்டும்?
Yearender 2024: இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட.. நபர்கள், விளையாட்டுகள்.. இதோ லிஸ்ட்!
{{comments.comment}}